இந்தியாவில் கணினி அறிவில் கேரளா முதலிடம்!

3/18/2015 5:50:53 PM

இந்தியாவில் கணினி அறிவில் கேரளா முதலிடம்!

கொச்சி: இந்திய அளவில் கணினி கல்வி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதல் இடத்தில் உள்ளது. கேரளாவில் 49% குடும்பங்களில் வீட்டிற்கு ஒருவர் கணினி கல்வி பயின்றவராக உள்ளார். கடந்த வாரம் வெளியான 2014 ஆம் ஆண்டிற்கான கல்வி அறிக்கையில் கல்வி சார்ந்த பல முக்கிய விவரங்கள் வெளியிடப்பட்ட்து. இதன்படி, இந்தியாவில் 22 சதவீத குடும்பங்களில் வீட்டிற்கு ஒருவர் கணினி கல்வி பயின்றவராக உள்ளனர்.

மாநில அளவில் 49 சதவீதத்தினர், அதாவது  39.17 லட்சம் குடும்பங்களில் ஒருவருக்கு கணினி அறிவு இருப்பதால் கேரளா கணினி கல்வியறிவில் நாட்டின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. கேரளாவை அடுத்து பஞ்சாப், சிக்கிம் மாநிலங்கள்  47% மற்றும் 43% பெற்று அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளன.

கேரளாவில் 97 சதவீத கிராமங்கள் ஒவ்வொன்றிலும் இண்டர்நெட் மையங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X