மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கோடிங் பயிற்சி

11/10/2017 11:02:47 AM

மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கோடிங் பயிற்சி

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

படிப்புக்கேற்ற வேலை கிடைத்தால் அந்த வேலை அவர்களுக்கு எளிதாக இருப்பதோடு, அதில் முழு விருப்பத்தோடு பணியாற்றவும் முடியும். ஆனால், படித்தது ஒன்று  பார்க்கும் வேலை மற்றொன்று என்றே இன்றைக்கு ஏராளமானோர் வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையைப் போக்கும் முயற்சியாக மருத்துவம் சார்ந்த படிப்புகள் படித்தவர்கள் அதே துறை சார்ந்த கணினி வழி வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வழிவகைகளைச் செய்து வருகிறது ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனம்.

இந்நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் புராஜெக்ட்ஸ் - தலைமைத் துணைத் தலைவர் பாஸ்கரன் கோபாலனைச் சந்தித்தபோது அவர், மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து விவரித்தார்.“ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனம் மெடிக்கல் அவுட்சோர்ஸிங் அதாவது, மருத்துவ சுகாதாரப் பணிகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் இந்தியாவில் முன்னணியில் உள்ளது. 2004ல் பெங்களூரில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது சென்னை, திருச்சி, பீமாவரத்திலும், வெளிநாடுகளில் பிலிப்பைன்ஸில் மணிலா, செபு என மொத்தம் 6 இடங்களில் செயல்பட்டு வருகிறது.

பெங்களூருவைத் தலைமையிடமாகக்கொண்ட இந்நிறுவனத்திற்கு அமெரிக்காவில் உள்ள ஹெல்த் கேர் நிறுவனங்கள் 100க்கும் மேல் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அவர்களுக்கான ஹெல்த் கேர் அவுட்சோர்ஸிங் பணிகளான மெடிக்கல் கோடிங், சார்ஜ் என்ட்ரி, பேமன்ட் போஸ்டிங், அக்கவுன்ட்ஸ் ரிசிவபிள் அனாலிசிங் மற்றும் நிர்வாகம், மருத்துவ வருவாய்ச் சுழற்சி மேலாண்மை உள்ளிட்ட சுகாதார நிர்வாகப் பணிகள் குறித்த அனைத்து வேலைகளைச் செய்துகொடுத்து வருகிறது. எங்கள் நிறுவனத்தில் தற்போது 12,000-க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்” என்று பெருமிதத்தொடு கூறுகிறார் பாஸ்கரன்.

மேலும் அவர் கூறுகையில், “மருத்து வத்தில் Nursing, M.Pharm, B.Pharm, Ph.D, BDS, MDS, BAMS, BHMS, BUMS, BPT, MPT, BOT, MOT, M.Sc, B.Tech, B.Sc, B.Tech, Ph.D, M.Sc, B.Sc, Biotechnology /M.Sc, B.Sc Microbiology/ M.Sc, B.Sc Biochemistry, M.Sc, B.Sc Biology, Bio- Medical graduates, Zoology, Botany, Bio-informatics, Endocrinology, Nutrition & Dietetics, Anatomy and physiology, Health Education 3rd year students ஆகிய படிப்புகளைப் படித்தவர்களுக்கு இங்கு வேலைவாய்ப்பு நிச்சயம் உண்டு.  

ஏனெனில், இந்நிறுவனம் மூன்று விதமான பணிகளைச் செய்துவருகிறது.

1. டேட்டா என்ட்ரி, 2.வாய்ஸ் பிராசஸ் (பெரும்பாலும் இரவுப் பணி, அமெரிக்க நேரப்படி பணி இருக்கும்), 3. மெடிக்கல் கோடிங் (பகல்நேரப் பணி). எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருமே அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். டேட்டா என்ட்ரி வேலைக்கு பிளஸ் 2 படித்திருந்தாலே போதும். வேகமாக டைப் செய்யக்கூடியவராக இருக்க ேவண்டும், வேலைக்கான வாய்ப்பு உண்டு.

மெடிக்கல் கோடிங் வேலைக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள படிப்புகள் படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வேலை வழங்கப்படும். வாய்ஸ் பிராசஸ் வேலைக்கு ஆங்கிலம் நன்றாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். அதாவது, ஆங்கிலம் பேசப் புரிந்து கொள்ளத் தெரிந்திருந்தால், அமெரிக்கர்களுடன் பேசுவதற்கான ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டு வேலை வழங்கப்படும். இந்த மூன்றும்தான் பணியில் சேருவதற்கான அடிப்படைத் திறன் செயல்பாடு” என்கிறார்.

பயிற்சி முறை மற்றும் வேலைவாய்ப்பு குறித்துக் குறிப்பிடும்போது, “பயிற்சி மேற்கொள்ள விரும்புவோர் எங்கள் www.omcacademy.com என்ற இணையதளம் மூலமாகவும், நேரடியாகவும் வந்து விண்ணப்பித்தால் டெஸ்ட் வைத்து தேர்வு செய்வோம். இப்படித் தேர்வு செய்யப்படும் அனைவரும் பணியில் உடனடியாகச் சிறந்துவிளங்க முடியாது. இவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகவே ஒமேகா மருத்துவக் குறியீட்டு அகாடெமி என்ற அகாடெமி வைத்துள்ளோம். இந்த அகாடெமியில் சேர்க்கப்பட்டு மெடிக்கல் கோடிங் பயிற்சி (60 நாட்கள்) சிறந்த வல்லுநர்களைக் கொண்டு அளிக்கப்படுகிறது. இதற்குச் சிறு தொகை கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

ஏனென்றால், இங்குப் படித்தவர்கள் இதுபோன்று வேறு எந்த நிறுவனங்களில் வேண்டுமானாலும் அதன்பிறகு எளிதாகப் பணியில் சேர்ந்துவிட முடியும். ஆனால், பயிற்சிக்குப் பின்னர் ஒரு தேர்வு நடத்தி எங்கள் நிறுவனத்திலேயே வேலையில் அமர்த்திவிடுவோம். ஒரு வருடம் தொடர்ந்து வேலை பார்த்துவரும் நிலையில், பயிற்சியின்போது அவர்கள் செலுத்திய தொகை அவர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டுவிடும்.  

இந்த மெடிக்கல் கோடிங் அகாடெமி திருச்சி, சென்னையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு இதுவரையில் 2000 பேருக்குப் பயிற்சி அளித்து, அதில் 1900 பேரை எங்கள் நிறுவனத்திலேயே பணியில் அமர்த்தியுள்ளோம். மருத்துவம் சார்ந்த படிப்புகளைப் படித்துவிட்டு மருத்துவமனைகளிலோ மற்றும் பார்மஸிகளிலோ வேலை கிடைக்கவில்லையே என்று இருப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்கள் படித்த படிப்புக்கேற்ற வேலையில் பணியாற்றலாம். மேலும் விவரங்களுக்கு www.omegahms.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்” என்று மருத்துவப் படிப்பு முடித்தவர்களுக்கான அற்புதமான வாய்ப்பு குறித்து கூறி முடித்தார்.

- திருவரசு

X