முதுகலை கட்டுமான மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள்!

10/21/2019 5:07:44 PM

முதுகலை கட்டுமான மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள்!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

அட்மிஷன்

கட்டுமான மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனமான National Institute of Construction Management  and Research-NICMAR மும்பை, புனே, ஹைதராபாத் (ஷமீர் பெட்), கோவா(பார்மகுடி), டெல்லி (பஹதூர் கார்க்) துபாய், பஹ்ரெய்ன் ஆகிய இடங்களில்  வளாகங்களைக்கொண்டுள்ளது.

இக்கல்வி நிறுவனம் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு (Department of  Scientific and Industrial Reserach - DSIR) துறையினால் `Scientific and Industrial Research Organisation- SIRO’ என்று அங்கீகரிக்கப்பட்ட, சொசைட்டிஸ் ரெஜிஸ்ட்ரேஷன் ஆக்ட் 1860-ன் கீழ் பதிவு செய்யப்பட்டது. இங்கு கட்டுமானம் மற்றும் அவை தொடர்பான  சேவைகளுக்கான பயிற்சி, ஆராய்ச்சி, தொழில், திறன் மேம்பாடு ஆகியவற்றை வழங்கிவருகிறது. இவை தவிர, இந்நிறுவனம் இத்துறையில் அறிவியல்  தொழில்நுட்பச் சேவை, வணிகப் பயிற்சி, விடுதிகள், உறைவிடங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றிற்கான ஆலோசனைகளையும் தருகிறது.
இக்கல்வி நிறுவனத்திற்குட்பட்ட வளாகங்களில் முதுநிலைப் பட்டப்படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எந்த வளாகத்தில் என்ன படிப்புகளுக்கு அறிவிப்பு?

1) போஸ்ட் கிராஜுவேட்   டிப்ளமோ இன் அட்வான்ஸ்டு கன்ஸ்ட்ரக்‌ஷன் மேனேஜ்மென்ட்  PGDACM - (2 ஆண்டுகள்) - புனே, ஹைதராபாத், (ஷமீர்பெட்)  கேரளா (பார்மகுடி)  டெல்லி (பஹதூர் கார்க்)
2) போஸ்ட் கிராஜுவேட்   புரோகிராம் இன் புராஜெக்ட் எஞ்சினியரிங் அண்ட் மேனேஜ்மென்ட PGP PEM - (2 ஆண்டுகள்) - புனே, ஹைதராபாத்
3) போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம் இன் ரியல் எஸ்டேட், அண்ட் அர்பன் இன்ஃபராஸ்ட்ரக்சர் மேனேஜ்மென்ட்   (PGP REUIM) - (2 ஆண்டுகள்) - புனே
4) போஸ்ட் கிராஜுவேட்   புரோகிராம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ், டெவலப்மென்ட், மேனேஜ்மென்ட் PGPIFDM -(2 ஆண்டுகள்) - புனே
5) போஸ்ட் கிராஜுவேட்   புரோகிராம் இன் காண்டெம்ப்ரரி ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் அண்ட் மேனேஜ்மென்ட்  (PGP CSCDM) - (2 ஆண்டுகள்) -  புனே
6) போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் ஆஃப் பேமிலி ஓண்ட் கன்ஸ்டரக்‌ஷன் பிசினஸ்  (PGPMFOCB) (ஒரு ஆண்டு), புனே.
7) போஸ்ட் கிராஜுவேட்   புரோகிராம் இன் குவான்டிட்டி சர்வேயிங் அண்ட் காண்ட்ராக்ட் மேனேஜ்மென்ட் (PGPQSCM) - (ஒரு ஆண்டு) - ஹைதராபாத்
8) போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம் இன் ஹெல்தி, சேஃப்டி, என்விரோன்மென்ட் மேனேஜ்மென்ட் PGP HSEM) - ஹைதராபாத்.

யார் விண்ணப்பிக்கலாம்?

1) PGPACM
பி.இ.(ஏதேனும் ஒரு துறை), பி.ஆர்க், பிளானிங்   குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்.
2) PGP PEM
பி.இ.(ஏதேனும் ஒரு துறை) குறைந்தது 50 விழுக்காடு.
3) PGPREUIM
பி.இ. (ஏதேனும் ஒரு துறை) குறைந்தது 50 விழுக்காடு.
4) PGP IFDM
பி.இ. (ஏதேனும் ஒரு துறை) பி.ஆர்க், பிளானிங்   குறைந்தது 50 விழுக்காடு.
5) PGP CS CDM
(ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு) குறைந்தது 50 விழுக்காடு.
6) PGPMFOCB
(ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு) குறைந்தது 50 விழுக்காடு,   கட்டுமானத் தொழில்புரியும் குடும்பத்தவர்.
7) PGP QSCM
பி.இ. (ஏதேனும் ஒரு துறை) குறைந்தது 50 விழுக்காடு.
8) PGP HSEM
பி.இ. (ஏதேனும் ஒரு துறை) டிப்ளமோ இன் எஞ்சினியரிங்   (4 ஆண்டு அனுபவம்)
இளநிலைப் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

கட்டுமான மேலாண்மை மற்றும் ஆராய்ச்சியில் முதுநிலைப் பட்டம் படிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.nicmar.ac.in,  http://admission.nicmar.ac.in, http://admission1.nicmar.ac.in/onlineadmission/ஆகிய இணையதளங்கள் மூலமோ அல்லது  இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து  விண்ணப்பிப்பவர்கள் Dean-Admissions, NICMAR, 25/1, Balewadi, N.I.A. Post Office, Pune - 411045 என்ற முகவரிக்கு  விண்ணப்பப் படிவத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
 
விண்ணப்பக் கட்டணம்:

ஒரு படிப்பிற்கு ரூ.2100 ஒன்றுக்கு மேற்பட்ட படிப்பிற்கு ரூ.2,620 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை `NICMAR, PUNE’  என்ற பெயரில் வரைவோலையாக எடுக்கவேண்டும். விண்ணப்பிக்க இறுதி நாள் 20.11.2019. இப்படிப்புகளில் சேர விரும்புபவர்கள்  NCAT/CAT/GATE/GMAT/CMAT PI and RA ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு www.nicmar.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
   
முனைவர் ஆர்.ராஜராஜன்

X