பார்க்க வேண்டிய இடம்

7/7/2017 2:30:36 PM

பார்க்க வேண்டிய இடம்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

ராயக்கோட்டை

இது தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர் ஆகும். இவ்வூருக்குப் பக்கத்தில் உள்ள மலையில் கோட்டை உள்ளது. இம்மலை கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரமுடையது. இக்கோட்டையைத் தரைக்கோட்டை, மலைக்கோட்டை என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். மலைக்கோட்டை சிறந்த பாதுகாப்பு அரண்களைக் கொண்டது. பல குளங்கள், வெடிமருந்துச் சாலைகள், இடிபாடுகளுடன் கூடிய பல கட்டடங்கள் உள்ளன. முதல் மூன்று மைசூர் போர்களிலும் ராயக்கோட்டை சிறப்பிடம் பெற்றது.

ஐதர், திப்புவிற்கும், ஆங்கிலேயருக்கும் இடையே பல போர்கள் நடைபெற்றுள்ளன. இக்கோட்டை திப்புவிடமிருந்து மேஜர் கௌடி என்பவரால் 20.7.1791-ல் ஆங்கிலேயர் வசமானது.கிருட்டிணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள பாராமகால் என்றழைக்கப்படும் பன்னிரண்டு கோட்டைகளில் ஒன்றாகவும், தலைமைக் கோட்டையாகவும் இருந்தது. இந்தியாவிற்குப் போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள் வந்த சமயத்தில் இந்த ஊரை மிக அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

மலைக்கோட்டையில் அரச பரம்பரையினர் வாழ்ந்தனர். அவர்களின் பாதுகாப்புக்காக தரைக்கோட்டை் கட்டப்பட்டது. ஜெகதேவிராயர் காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை இந்தக் கோட்டை பயன்பாட்டில் இருந்தது. இப்பகுதியில் ஏறத்தாழ 1000 ஆண்டுகளாக ஆண்டுவந்தவர்கள், ஒவ்வொரு காலத்திலும், ஒரு நினைவுச்சின்னத்தை ஏற்படுத்தினர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1792 ஆம் ஆண்டு, மேஜர் கௌடி தலைமையில், 800 வீரர்கள் கொண்ட படை, திப்புசுல்தானைத் தாக்க வந்தது.

இரண்டு நாட்கள் நடந்த சண்டைக்குப் பிறகே, இக்கோட்டையின் வடக்குப் பகுதி மதிலை, பீரங்கி கொண்டு தகர்த்தனர். அந்த அளவுக்கு இத்தரைக்கோட்டை உறுதியாக இருந்துள்ளது. தொடர்ந்து ஆங்கிலேயப்படை அங்கு தங்கியது. அக்காலகட்டத்தில் இறந்த படையினரின் உடல்கள் அங்கேயே புதைக்கப்பட்டன. மேலும், தகவல்கள் அறிய https://ta.wikipedia.org/wiki/ராயக்கோட்டை

X