ஊரை உருவாக்கும் இன்ஜினியர்கள்

7/28/2017 3:04:57 PM

ஊரை உருவாக்கும் இன்ஜினியர்கள்

நகர்ப்புற திட்டமிடல் மேலைநாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே கடைபிடிக்கப் பட்டுள்ளது. இது அர்பன் பிளானிங் அல்லது சிட்டி பிளானிங் என  அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள சண்டிகர், புனே போன்ற நகரங்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்ட நகரங்களாகும். அதாவது,  இங்கு வசிக்கும் மக்கள் சீரிய சாலைகள், பாலங்கள், வீட்டு வசதிகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், குடிநீர், சாக்கடை, தொழிற்சாலை  போன்ற வசதிகளை பெற்றுள்ளனர். நகர்ப்புற திட்டமிடல் படிப்புகளின் நோக்கம் என்பது நவீன, வசதியான, பாதுகாப்பான உள் கட்டமைப்பு வசதிகளைக்  கொண்ட நகர் அல்லது ஊரை வடிவமைப்பதாகும். இதில் இன்ஜினியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

கன்ஸ்ட்ரக்‌ஷன் இன்ஜினியர்கள், ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியர்கள், ஜியோ மெக்கானிக்கல் இன்ஜினியர்கள், தண்ணீர் மற்றும் மரேன் இன்ஜினியர்கள் என்று  இவர்களின் பட்டியல் மிகவும் நீளமானது. இது போன்ற இன்ஜினியர்களின் பணிகளை சுருக்கமாக தெரிந்து கொள்வதோடு, மேற்கண்ட துறைகளை  தேர்ந்தெடுத்து படித்து, நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்கள் துணை நிற்க வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

கன்ஸ்ட்ரக்‌ஷன் இன்ஜினியரிங்

குறிப்பிட்ட வடிவங்களை உருவாக்குவதே இத்துறையின் அடிப்படை அம்சமாகும். ஒரு கன்ஸ்ட்ரக்‌ஷன் இன்ஜினியர் திட்டமிடுதலில் தொடங்கி,  வடிவமைத்தல், பட்ஜெட் கன்ட்ரோல், குவாலிடி கன்ட்ரோல், மெட்டீரியல் டெஸ்டிங் என்பதிலிருந்து மேற்பார்வை செய்வது போன்ற அன்றாட  கட்டுமானப் பணி தொடர் புடைய வேலைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங்

கட்டுமானத்தில் உபயோகிக்கப்படும் பல்வேறு பொருட்களின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புகள் குறித்த படிப்பாகும் இது. அழுத்தத்தை தாங்கும்  உறுதித்தன்மை பற்றி கட்டுமான உபயோகப் பொருட்கள் பரிசோதிக்கப்பட வேண்டும். அதுபோலவே அணைகள், சாலைகள், எண்ணெய் கிணறு கள்,  பாலங்களில் வேறு விதமான கட்டுமானப் பொருட்கள் உபயோகப்படுத்தப்பட வேண்டியிருப்பதால் ஒவ்வொரு கட்டுமானப்பணிக்கும் எப்படிப்பட்ட  பொருட்களை உபயோகிக்க வேண்டும் என்பதை இவர்களே முடிவு செய்கிறார்கள்.

ஜியோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

எந்தவொரு கட்டிடமாக இருந்தாலும் சரி, அதன் அடித்தளம் என்பது அது அமைந்துள்ள பூமியின் பரப்பைச் சார்ந்துள்ளது. எனவே, மண்ணின் தன்மையே எந்தக் கட்டிடத்திற்கும் ஆதாரமாக உள்ளது. இவற்றைப் பற்றிப் படிப்பதுதான் ஜியோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங். இதைப் படிப்பவர்களில் பெரும்பாலானோர் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் தாதுக்களை கண்டறியும் தொழிற்சாலைகளில் பணியில் இருக்கிறார்கள்.

தண்ணீர் மற்றும் மரேன் இன்ஜினியரிங்

தண்ணீர் தொடர்புடைய வேலைகளுக்காக நகரங்களில் கட்டப்படும் மாதிரி, விவசாயம், கால்வாய்கள், அணைகள், வேஸ்ட் வாட் டர் டிரீட்மெண்ட்  ஆலைகள், துறைமுகம், எண்ணெய் கிணறுகள், ஹைட்ரோ எலெக்ட்ரிக் மின்சார வசதிகள் தொடர்புடைய படிப்புகள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவையே.  என்றும் எப்போதும் தேவைப்படும் திறனாளர்களை உருவாக்கும் சிவில் இன்ஜினியரிங் துறையை மாணவர்கள் தேர்வு செய்து வாழ்வில் வெற்றி  பெறுவதோடு, நாட்டின் முன்னேற்றத்திலும் பங்கு கொள்ளலாம் என்பது கல்வியாளர்களின் கருத்து.