அறிய வேண்டிய மனிதர்

8/23/2017 12:05:16 PM

அறிய வேண்டிய மனிதர்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

உடுப்பி ராமச்சந்திர ராவ்

இன்று சர்வதேசத் தரத்தில் செயல்படும் இந்திய விண்வெளித் துறை ஆராய்ச்சி மையமான இஸ்ரோவை அணு அணுவாகச் செதுக்கியவர்களில் முதன்மையானவர் உடுப்பி ராமச்சந்திர ராவ். இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டா, இவரின் தலைமையில்தான் விண்ணில் ஏவப்பட்டது. கர்நாடக மாநிலம் அடமறு என்ற இடத்தில் மார்ச் 10, 1932ம் ஆண்டு பிறந்த இவர் தன் பிஎச்.டி இயற்பியல்  ஆராய்ச்சிப் படிப்பை இஸ்ரோவின் மூத்த தலைவர்களில் ஒருவரான விக்ரம் சாராபாய் வழிகாட்டுதலில் படித்து, காஸ்மிக் ரே விஞ்ஞானியாக அகமதாபாத்திலுள்ள இயற்பியல் ஆய்வகத்தில் பணியில் அமர்ந்தார்.

1972ம் ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவை உருவாக்க தலைமை ஏற்று அதனைத் தொடர்ந்து பாஸ்கரா, ஆப்பிள், ரோகினி என மொத்தம் 18 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ வழிவகை செய்தார். இயற்பியல், விண்வெளி, எலக்ட்ரோ மேக்நெட்ஸ் போன்ற துறைகளில் இவர் செய்த சாதனைகளைக் கவுரவிக்கும் பொருட்டு பத்மபூஷன், பத்மவிபூஷன் உட்பட மொத்தம் 32 விருதுகளை அளித்து இந்திய அரசு இவரைப் பெருமைப்படுத்தியது. மேலும் அறிவியல், விண்வெளி போன்ற துறைகளுக்காக 16 சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.  இவரைப்பற்றி மேலும் அறிய https://en.wikipedia.org/wiki/Udupi_Ramachandra_Rao