படிக்க வேண்டிய புத்தகம்

8/23/2017 12:06:48 PM

படிக்க வேண்டிய புத்தகம்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

திருக்குறள் அறத்துப்பால் தெளிவுரை - பி.வி சண்முகம்

‘திருக்குறளைக் கற்பதற்காகவே தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கினேன். ஆனால், அதற்கான ஓய்வை ஆண்டவன் எனக்கு அருளினாரில்லை’என மகாத்மா காந்தி திருக்குறளைக் கற்க இயலாமல் வருத்தப்பட்டார். இவ்வகையில் தமிழகத்தில் பிறந்த அனைவரும் அதிர்ஷ்டசாலிகள்தான்.  செம்மொழியான தமிழ்மொழியின் சிறப்பை உலகமே போற்றும் வகையில் பெருமையடையச் செய்தது திருக்குறள். மனிதன் எப்படி வாழவேண்டும் என அறம் சார்ந்த கொள்கைகளை நெறிப்படுத்தி உலகமே வியக்கும் உலகப் பொதுமறையாக வானுயர்ந்து நிற்கிறது.  

இத்தகைய பெருமைகளோடு  அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மனிதனின் வாழ்வை படம்பிடித்துக் காட்டும் திருக்குறளுக்குப் புலவர் பெருமக்கள் பலர் உரை எழுதியுள்ளனர். அதேபோன்ற ஒரு முயற்சியாக இந்நூலின் ஆசிரியர் பி.வி.சண்முகம் பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என மொத்தம் 38 அதிகாரங்களைக்கொண்ட அறத்துப்பாலின் ஒவ்வொரு குறளுக்கும் தெளிவான முறையில் உரை எழுதி,  ஒவ்வொரு அதிகார முடிவிலும் அவ்வதிகாரத்தின் மையக்கருத்தை எழுதி தெளிவாக்கியிருப்பது தனிச்சிறப்பு. அனைவரும் அறம் சார்ந்த விஷயங்களை ரத்தினச்சுருக்கமாகப் புரிந்துகொள்ள உதவும் இந்நூல்.

(வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், 7 (ப.எண்-4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை- 600 017. விலை ரூ.90. தொலைபேசி: 044-2434 2926/2434 6082)