பார்க்க வேண்டிய இடம்

8/23/2017 12:09:14 PM

பார்க்க வேண்டிய இடம்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

திருமயம் மலைக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலுள்ள இம்மலைக்கோட்டையானது 1676ம் ஆண்டு ராமநாதபுரத்தை ஆண்ட விஜயரகுநாத சேதுபதி என்னும் கிழவன் சேதுபதியின்  காலத்தில் கட்டப்பட்டது. தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோட்டையில் சிவனுக்கும், விஷ்ணுவிற்கும் குடைவரை கோயில்கள் உள்ளன. இது வட்டவடிவில் அமைந்துள்ள கோட்டையாகும். கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காணமுடியும்.

16ம் நூற்றாண்டில் அக்கால ஆழ்வார்களால் பாடல்பெற்ற தலம். இங்கே இசைக் கல்வெட்டுகள் உள்ளன. மேலும் இவ்வூர் வைணவர்களின் சிறப்புமிக்க இடமாகக் கருதப்படுகிறது. ராமநாதபுரம் சேதுபதிகள் 16, 17ம் நூற்றாண்டுகளில் திருமயம் உள்ளடக்கிய பகுதிகளைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்தனர். கிழவன் சேதுபதியின் காலத்தில் இந்த ஊர் சேதுபதி நாட்டின் வட எல்லையாகத் திகழ்ந்ததாம். ராமநாதபுரத்துக்கு எல்லையாகத் திருமயம் கோட்டை இருந்துவந்துள்ளது.

எதிரிகளிடமிருந்து பாதுகாக்க இக்கோட்டையில் பிரம்மாண்ட பீரங்கிகள் வைத்து காத்துவந்துள்ளார். இக்கோட்டையிலிருந்து சேகரிக்கப்பட்ட உடைவாள்கள், பீரங்கிக் குண்டுகள், பீரங்கிகள், பூட்டுகள், சங்கிலிப்போர் உடைகள் போன்ற அரிய பல பொருட்கள் புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அறிய https://ta.wikipedia.org/wiki/ திருமயம்_மலைக்கோட்டை