பார்க்க வேண்டிய இடம்

10/9/2017 12:15:07 PM

பார்க்க வேண்டிய இடம்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நாமக்கல் கோட்டை

தமிழகத்தில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையாகும். இந்தக்கோட்டை 75 மீட்டர் (246 அடி) உயரம் கொண்ட ஒரே கல்லாலான மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 16ஆம் நூற்றாண்டில் இருந்த சேந்தமங்கலம் பாளையக்காரரான ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்டது எனக் கருதப்படுகிறது.

இதைக் கட்டியவர் மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா என்ற கருத்தும் நிலவுகிறது. திப்பு சுல்தான் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்ெபனியை எதிர்த்துப் போரிட இக்கோட்டையைப் பயன்படுத்தினார். கோட்டைக்கு அருகில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில், ஆஞ்சநேயர் கோயில் ஆகியவை புகழ்பெற்றவை. மலையைச் செதுக்கி குடைவரைக் கோயில்கள் செய்யப்பட்டுள்ளன.

இங்குள்ள நரசிம்மர் கோயிலும் அரங்கநாதர் கோயிலும் மலையைக் குடைந்து செய்யப்பட்டவையாகும். மலையின் கிழக்குப் பகுதியில் அரங்கநாதர் கோயிலும் மேற்குப் பகுதியில் நரசிம்மர் கோயிலும் உள்ளன. இக்கோயில்களை கி.பி 784ல் அதியமான் மரபைச் சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இக்கோயில்களின் மண்டபங்களும் பிற கோயில்களும் பின்னால் கட்டப்பட்டவையாகும். மேலும் அறிய https://ta.wikipedia.org/ wiki/நாமக்கல்_கோட்டை

X