அறிய வேண்டிய மனிதர்

12/6/2017 2:17:22 PM

அறிய வேண்டிய மனிதர்

நன்றி குங்குமம் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி

சவிதா வைத்தியநாதன்

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் இருபது ஆண்டுகளாக வசித்து வரும் சவிதா வைத்தியநாதன் முதுநிலைப் படிப்பான எம்.பி.ஏ முடித்துவிட்டு அமெரிக்க நாட்டின் கலிஃபோர்னியா மாகாணத்தின் குப்பர்டினோ நகரிலுள்ள பள்ளிகளில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் தனியார் வங்கிகளில் பணியாற்றியதுடன் பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

உலக அளவில் பிரபலமான கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் இந்நகரில்தான் அமைந்துள்ளது. மேலும் இந்த நகரில் வாழும் அனைவரும் கல்வியறிவில் சிறந்து விளங்கி வருவதாக ‘போர்ப்ஸ்’ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இப்படி பல பெயர்களைப் பெற்றுள்ள இந்நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் சவிதா வைத்தியநாதன். அமெரிக்காவின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல்பெண் என வரலாற்றில் பெயர் பெற்றுள்ளார் . மேலும் விவரங்களுக்கு https://en.wikipedia.org/wiki/Savita_Vaidhyanathan

X