பார்க்க வேண்டிய இடம்

12/6/2017 2:19:42 PM

பார்க்க வேண்டிய இடம்

நன்றி குங்குமம் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி

தலக்காடு

கர்நாடகாவில் காவிரியின் இடக்கரையில் அமைந்துள்ள நகரம்தான் தலக்காடு. இது மைசூரிலிருந்து 45கிமீ தொலைவிலுள்ளது. கி.பி. 350-1050  வரை மேலைக் கங்கர்களின் தலைநகரமாக விளங்கிய இந்நகரம் பின் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கைப்பற்றப்பட்டது.

ஒரு காலத்தில் 30 கோயில்களைக்கொண்டிருந்த கோயில் நகரமாக விளங்கிய இந்நகரம் 16ம் நூற்றாண்டில் இயற்கைப் பேரிடர்களால் மணலில் புதையுண்டது. வைத்தியநாதேஸ்வரர் கோயில், பாதாளேஸ்வரர் கோயில், மருளேஸ்வரர் கோயில், அர்கேஸ்வரர் கோயில், மல்லிகார்ஜுனா கோயில் எனும் ஐந்து முக்கியமான கோயில்களுக்காக இந்நகரம் பிரசித்திபெற்றது.

இந்த நகரத்தில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் பஞ்சலிங்க தரிசனம் எனும் திருவிழா மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு https://en.wikipedia.org/wiki/Talakadu

X