அறிய வேண்டிய மனிதர்

12/19/2017 10:54:08 AM

அறிய வேண்டிய மனிதர்

நன்றி குங்குமம் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி

டெஸ்ஸி தாமஸ்

இந்திய ஏவுகணைத் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமைக்குரியவராகத் திகழ்பவர் டெஸ்ஸி தாமஸ். இவர் பிறந்தது 1963 ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த ஆலப்புழா என்ற ஊரில். திரிச்சூரிலுள்ள விண்வெளி ஏவுதளத்தின் அருகிலேயே வளர்ந்ததால்தான் தனக்கு  ராக்கெட்  மற்றும் ஏவுகணைகளின் மீது தீராக் காதல் வந்தது எனக் கூறும் டெஸ்ஸி தாமஸ் திரிச்சூரில் எஞ்சினியரிங் பட்டப்படிப்பும், புனேவில் முதுநிலைப் படிப்பான எம்.டெக். பட்டமும் பெற்றுள்ளார்.

பின்பு அணு விஞ்ஞானியும், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியுமாகிய அப்துல் கலாம் அவர்களின் தலைமையில் உருவாக்கபட்ட அக்னி-3  ஏவுகணை உதவித் திட்ட இயக்குநராக இஸ்ரோவில் பணியில்  அமர்த்தப்பட்டார். அக்னி-3 ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு மூளையாக இருந்து இவர் செயல்பட்டதால்  அடுத்ததாகப் புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் திட்ட இயக்குநராகவும் செயல்பட்டார்.

அக்னி-5 ஏவுகணையின் வெற்றி உலக அளவில் ஏவுகணைத் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவிற்கென தனி இடத்தைக் கொடுத்தது.  இவரின் இப்பணியைப் போற்றும் விதத்தில் இந்திய அரசு லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருதை அளித்து பெருமைப்படுத்தியது.இவரைப்பற்றி மேலும் அறிய https://en.wikipedia.org/wiki/Tessy_Thomas

X