பார்க்க வேண்டிய இடம்

12/19/2017 10:57:34 AM

 பார்க்க வேண்டிய இடம்

நன்றி குங்குமம் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி

பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம், புதுச்சேரி

தமிழகத்தின் புகழ்மிக்க கவிஞராகிய சுப்புரத்தினம் எனும் இயற்பெயரைக் கொண்ட பாரதிதாசன், 1945 இல் புதுச்சேரியில் குடியேறிப் பெருமாள் கோயில் தெருவில் இருக்கும் இல்லத்தில் 1964 வரை வாழ்ந்துழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டுள்ளார். பாரதியாரின் மீது பேரன்புகொண்டு தன் பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டு இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட இத்தமிழ்க்கவியின் மறைவிற்குப் பின் இந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது. பாவேந்தர் பாரதிதாசன் வாழ்ந்த இல்லம் தற்போது பாவேந்தர் பாரதிதாசன்  நினைவு அருங்காட்சி யகம் மற்றும் ஆய்வு மையமாக விளங்குகிறது.

1900 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதெனக் கருதப்படும் இவ்வில்லத்தில் நினைவு நூலகம், காட்சிக்கூடம் அமைக்கப்பட்டது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை அறிந்துகொள்ளும் வகையில் புகைப்படங்கள், கையெழுத்துப் படிகள், அவர் எழுதிய நூல்கள், இதழ்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், பாவேந்தரைப் பற்றி அவர் காலத்தில் வாழ்ந்து பழகிய நண்பர்கள், கவிஞர்கள், உறவினர்களிடமிருந்து ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்ட செய்திகள், பாவேந்தரைப்பற்றிய தமிழ் அறிஞர்களின் கருத்துகள், இதழ்களின் மதிப்புரைகள் ஆகியன அருங்காட்சியகத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் தகவல்களுக்கு http://muelangovan.blogspot.in/2013/12/blog-post_44.html

X