படிக்க வேண்டிய புத்தகம்

12/19/2017 10:59:32 AM

படிக்க வேண்டிய புத்தகம்

நன்றி குங்குமம் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி

ஹிதோபதேசத்தில் நிர்வாகம் நல்லி குப்புசாமி செட்டியார்

குழந்தைப் பருவத்தில் நம்மில் பலர் கேட்டறிந்த ஹிதோபதேச நீதி நெறிக் கதைகளை தனிமனித நிர்வாகக் கோணத்தில் அலசுகிறது இந்நூல். மூல நூலான ஹிதோபதேசக் கதைகள் அனைத்தும் ஒரு மனிதன் மகத்தான வாழ்வை மேற்கொள்வதற்கான வழிமுறைநெறிகளாக தொகுத்து கொடுக்கப்பட்டிருக்கும். அக்கதைகளின் மையக் கருத்தை நிர்வாகக் களத்தில் ஆய்ந்து தன் நூலில் பகிர்ந்துள்ளார் இந்நூலின் ஆசிரியரும் தமிழ்நாட்டின் மிக முக்கிய தொழிலதிபரும் மிகச்சிறந்த நிர்வாகியுமான நல்லி குப்புசாமி செட்டியார்.

சிறந்த மனிதனை உருவாக்குவது, தொழில் தொடங்குவதற்கான சூழல், தொழிலை வளர்ப்பதற்கான வழிமுறைகள், வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான யுத்திகள், சக தொழிலாளர்களுடன் அணுகுமுறைகள் எனப் பன்முகத்தன்மையோடு படைத்துள்ளார். மேலும் குழந்தைகள் முதல் உயர் பதவியிலுள்ள நிர்வாகிகள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது இந்நூலின் சிறப்பு.(வெளியீடு: Brain Bank, 16/2, ஜெகதாம்பாள் தெரு, தி நகர், சென்னை -17. விலை ரூ.100. தொடர்புக்கு: 9841036446)

X