அறிய வேண்டிய மனிதர்

1/8/2018 12:00:26 PM

அறிய வேண்டிய மனிதர்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

அருந்ததி பட்டாச்சார்யா

கொல்கத்தா நகரில் வசித்துவந்த வங்காளி தம்பதியருக்கு 1956ம் ஆண்டு பிறந்த அருந்ததி பட்டாச்சார்யா பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பெண் தலைவராக இருந்தவர். 1977ம் ஆண்டு  பாரத ஸ்டேட் வங்கியைத் நிர்வகிக்கத் தொடங்கியபோது அருந்ததி பட்டாச்சார்யாவுக்கு வயது 22. இவருடைய தந்தை பரோதியுள் குமார் முகர்சி பொகாரோ இரும்புத் தொழிற்சாலையில் பணிபுரிந்தார். தாயார் ஓமியோபதி மருத்துவராக இருந்தார்.

அருந்ததி பட்டாச்சார்யா பொகாரோவில் தூய சேவியர் பள்ளியில் படித்தார். கொல்கத்தாவில் உள்ள லேடி பிரபோன் கல்லூரியில் ஆங்கில இலக்கியமும் பின்னர்  ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். இவருடைய கணவர் பிரிதிமாய் பட்டாச்சார்யா கரக்பூர் ஐஐடியில்  பேராசிரியராக இருந்தார். இவர் அந்நிய செலாவணி, கருவூலம், மனிதவளம், முதலீட்டு வங்கி என தனது 40 வருட பாரத ஸ்டேட் வங்கிப் பணி வாழ்க்கையில்  பல பதவிகளை வகித்த முதல் பெண் என்ற பெயர் பெற்றவர். இவரை 2016ம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த முதல் 25 பெண்கள் பட்டியலில் வரிசைப்படுத்தியுள்ளது பிரபல ஆங்கில இதழான ஃபோர்ப்ஸ். இவரைப்பற்றி மேலும் அறிய https://en.wikipedia.org/wiki/Arundhati_Bhattacharya

X