வாசிக்க வேண்டிய வலைத்தளம்

1/8/2018 12:01:20 PM

வாசிக்க வேண்டிய வலைத்தளம்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

http://vivasayam.org

மக்களில் பெரும்பாலானோர் பணம் கொழிக்கும் பங்குச் சந்தையிலும், ஐ.டி. தொழிலிலும் ஆர்வம் காட்டி அதில் மூழ்கிக்கிடக்கும் சூழலில், விவசாயத்துக்காகவே செயல்படும் ஒரு வலைத்தளம் செயல்பட்டுவருவது வியப்புதான். அதிலும் தண்ணீர்ப் பஞ்சத்தாலும், மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்படும் விவசாயிகள் தற்கொலை ஒருபுறம் இருக்க விவசாயிகளுக்கு வழிகாட்டும் விதமாக பல பயனுள்ள தகவல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது இத்தளத்தின் சிறப்பு. உதாரணமாக விவசாயச் செய்திகள், தகவல்கள்,  தானிய வகைகள், மாடி வீட்டுத் தோட்டம், காய்கறி வகைகள், பயிர் பாதுகாப்பு, கால்நடை வளர்ப்பு முறை, கால்நடை மருத்துவம் என  முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே மையப்படுத்தி செயல்படுகிறது  இத்தளம். விவசாயிகளுக்கு மட்டுமல்ல சிறு அளவில் தோட்டங்களை அமைக்க நினைக்கும் பசுமை விரும்பிகளுக்கும் பயனுள்ள வலைத்தளம் இது.

X