படிக்க வேண்டிய புத்தகம்

1/8/2018 12:02:09 PM

படிக்க வேண்டிய புத்தகம்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

சாதிக்கப் பிறந்தவன் நீ…
டாக்டர் ச.சக்திவேல் B.Com.,MBA.,LLB.

முடியாதது எதுவும் இல்லை. எதுவும் உன்னால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கைத் தீயை நெய் ஊற்றி வளர்க்கும் நூல் இது. இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் படிக்கின்ற வாசகர்களின் உள்ளத்தில் உரமூட்டி, முயற்சியை மேலும் கூட்டி லட்சியத்தை அடைவதற்கு வழிகாட்டும் நூல் இது. வாழ்க்கையில் முன்னேற வேண்டும், சமூகத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற வேண்டும் என்று கனவு காண்பவர்கள் இந்த நூலைப் படித்தால் கனவு நனவாவது நிச்சயம். அதற்கு உதாரணமாகப் புதுமையாகச் சிந்தியுங்கள்… தடைக் கற்களை படிக்கற்களாக்குவோம், தனித்துவம் மிக்கவர் சாதனையாளர் ஆகிறார்…, தொழில்முனைவோர்கள் பிறப்பதில்லை… உருவாகிறார்கள் என்பது போன்ற சில தலைப்புகளைச் சொல்லலாம். அனைவருக்கும் பயனுள்ள, ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நூல் இது. (வெளியீடு: பரிவு அறக்கட்டளை, 123, 2வது தளம், கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை  600 014. விலை: ரூ.100. தொடர்புக்கு: 044-42328887)

X