பார்க்க வேண்டிய இடம்

1/8/2018 12:03:04 PM

பார்க்க வேண்டிய இடம்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

சங்ககிரி மலைக்கோட்டை

சங்ககிரி மலைக்கோட்டை சேலம் மாவட்டத்தில் சங்ககிரி வட்டத்தில் ‘சங்கரி துர்க்கம்’ என்ற மலையின் மேல் காணப்படும் கோட்டையாகும். இது சேலத்திலிருந்து 35 கிமீ மேற்கில் அமைந்துள்ளது. இந்தக் கோட்டை சங்கு போன்ற வடிவம் கொண்டதால் இதற்கு சங்ககிரி என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கோட்டையில் ஆள் இறங்கும் குழி, தோல் உரிச்சான் மேடு, தொங்கவிட்டான் குகை, உருட்டிவிட்டான் பாறை ஆகியவற்றில் தண்டனை பெறுபவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு கொல்லப்படுவதால் சங்ககிரி என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோட்டை விஜயநகர அரசர்களால் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோட்டையின் உயரம் 5 கி. மீ. சங்ககிரி மலைக்கோட்டை தமிழகத்தின் மிக உயரமான மலைக்கோட்டையாகும். மலை அடிப்பகுதியிலிருந்து உச்சிவரை இக்கோட்டையில் ஒன்பது வாயில்கள் உள்ளன. கோட்டையின் மூன்றாவது வாயிலில் வரதராசப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு இன்றும் வழிபாடு நடத்தப்படுகிறது. இக்கோயிலிலுள்ள கல்யாண மண்டபத்தில் அமைக்கப்பட்ட தூண்கள் வேலைப்பாடு மிகுந்தவை. இக்கோயிலின் ஒருபகுதி இந்தியத் தொல்பொருள் துறையினரால் புனரமைக்கப்பட்டுள்ளது. கோட்டையின் உச்சியில் சென்ன கேசவப்பெருமாள் கோயில் உள்ளது. முக்கிய விழா நாட்கள் தவிர பிற நாட்களில் இக்கோயிலின் உற்சவர் மலையடிவாரத்தில் வைக்கப்படுகிறார். மலையடிவாரத்தில் சோமேஸ்வரசுவாமி கோயில் ஒன்றும் உள்ளது. இக்கோட்டை இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையினரின் பாதுகாப்பில் உள்ளது. மேலும் அறிய https://ta.wikipedia.org/wiki/சங்ககிரி_மலைக்கோட்டை

X