வாசிக்க வேண்டிய வலைத்தளம்

3/21/2018 11:53:49 AM

வாசிக்க வேண்டிய வலைத்தளம்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

வாசிக்க வேண்டிய வலைத்தளம்: www.scholarshipsinindia.com

இந்தியக் கல்லூரிகள் மற்றும் அதில் வழங்கப்படும் படிப்பு வகைகள், மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப், ஃபெல்லோஷிப், இன்டர்ன்ஷிப் குறித்த விவரங்களையும் கல்லூரிகளில் மாணவச் சேர்க்கை நாட்கள் என இந்தியக் கல்விமுறையின் அனைத்துக் கூறுகளையும் பட்டியலிடுகிறது இத்தளம்.

இந்திய மாணவர்களின் படிப்புச் செலவுகளுக்கான உதவித்தொகைகளும், குறிப்பிட்ட துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான ஊக்கத்தொகைகளும் வழங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மற்றும் அத்தொகைகளைப் பெறுவதற்கான வழிமுறைகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் மாணவர்களுக்கான விருதுகள், போட்டிகள், இந்தியக் கல்விநிறுவனத்தின் பொதுத் தகவல்கள் என கல்லூரி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உதவும் வகையில் செயல்படுகிறது இத்தளம்.

X