பார்க்க வேண்டிய இடம்

3/21/2018 11:59:28 AM

பார்க்க வேண்டிய இடம்

சிதறால் மலைக்கோவில்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளங்கோடு ஊராட்சிக்கு உட்பட்டது சிதறால் மலைக்கோவில். இச்சமணக் குகைக்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும் மார்த்தாண்டத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இக்குடைவரைக் கோவிலில் சமண சமயத்தின் மகாவீரர், பார்சுவநாதர் போன்ற தீர்த்தங்கரர்கள் மற்றும் பத்மாவதி தேவதையின் சிற்பங்களைச் சுற்றிலும் யட்சர்கள் மற்றும் யட்சினிகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. தீர்த்தங்கரர்களை வழிபடும்விதமாக அம்பிகை, வித்தியாதரர்களின் சிற்பங்கள் உள்ளன.

தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கோவிலானது பாறைகளில் குடைந்து வார்க்கப்பட்ட தீர்த்தங்கர்கள் சிலைகள், கல்தூண்கள், அழகிய கல் வேலைப்பாடுகள் போன்றவற்றால் வரலாற்றைத் தாங்கி நிற்கிறது. மேலும் தகவல்களுக்கு https://ta.wikipedia.org/wiki/சிதறால்_மலைக்_கோவில்

X