அறிய வேண்டிய மனிதர்

4/9/2018 12:03:31 PM

அறிய வேண்டிய மனிதர்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

சாருசீதா சக்கரவர்த்தி

இந்திய வேதியியல் விஞ்ஞானியான சாருசீதா சக்கரவர்த்தி அமெரிக்காவின் மசாசூசட் மாகாணத்தில்1964 ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி பிறந்தார். இயல்பிலேயே வேதியியல் மீது ஆர்வம் இருந்ததால் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. கெமிஸ்ட்ரி  படித்தார். பின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டமும் மற்றும் குவான்டம் சிதறல் மற்றும் நிறமாலையியல் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு பிஎச்.டி பட்டமும் பெற்றார்.

இவர் 1999 ம் ஆண்டு டெல்லியில் இயங்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் வேதியியல் பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். 2009ம் ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதைப் பெற்ற இவர் கோட்பாட்டு வேதியியல் மற்றும் ரசாயன இயற்பியல், மூலக்கூறு இயக்கவியல் என  வேதியியல் துறை சார்ந்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

இந்திய வேதியியல் அறிவுத் துறையில் தவிர்க்கமுடியாத ஆளுமையாக கருதப்பட்ட சாருசீதா, பெங்களூருவில் இயங்கும் ஜவர்ஹலால் நேரு ஆராய்ச்சி மையத்தின் இணை உறுப்பினராகவும் செயல்பட்டார். மேலும் இவரைப்பற்றி அறிய https://en.wikipedia.org/wiki/Charusita_Chakravarty

X