படிக்க வேண்டிய புத்தகம்!

4/9/2018 12:04:37 PM

படிக்க வேண்டிய புத்தகம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தண்ணியா செலவழிக்கலாம் பணத்தை - ஆர்.பத்மநாபன்

தனி மனிதனின் பொருளாதாரமே அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. அதிலும் இன்றைய டிஜிட்டல் உலகில் மனிதத் தேவைகளின் விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய வாழ்க்கைச் சூழலில் பாடுபட்டு ஈட்டிய வருமானத்தைப் பெருக்குவதிலும், செலவழிப்பதிலும் இருக்கும் முரண்பாடுகளைக் களைந்து சேமித்ததை எப்படிச் செலவழிப்பது என்ற நெறிமுறைகளை வகுத்து, நம் முன்னோர்களின் வாழ்வு முறையான சிக்கனமான வாழ்க்கை முறையை முன்னிறுத்துகிறது இந்நூல்.

ஈட்டிய பணத்தைச் செலவழிப்பதில்தான் உள்ளது ஒரு மனிதனின் பொருளாதார ஆளுமை திறன். அதன் காரணமாகவே அவன் எப்போதுமே பணக்காரனாக இருக்கிறான் என்ற உண்மையைத் தன் எழுத்தில் கொண்டுவந்து, சிக்கனமாக வாழ்வதற்கான ஃபார்முலாக்களை கதைகள் வாயிலாக அத்தியாயம் அத்தியாயமாக விளக்கியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் ஆர்.பத்மநாபன். அவசியம் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய பயனுள்ள புத்தகம் இது.

X