வாசிக்க வேண்டிய வலைத்தளம்: www.instructables.com

4/27/2018 2:12:55 PM

வாசிக்க வேண்டிய வலைத்தளம்: www.instructables.com

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

ஒவ்வொரு நாளும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது தொழில்நுட்ப உலகம். அதற்கு ஏற்றவாறு ஒவ்வொரு அறிவியல் தொழில்நுட்பங்களையும், புதிய கண்டுபிடிப்புகளையும் செய்முறைவிளக்கத்தோடு மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது இத்தளம்.

எல்.இ.டி பல்புகள் உருவாக்கும் விதம், நவீன டெக்னாலஜி சார்ந்த லெதர் வேலைப்பாடுகள், பேக்கிங் கிளாஸ்கள், அறிவியல் செயல்விளக்கங்கள், 3டி பிரின்டிங், 3டி டிசைனிங், லேசர் கட்டிங் வகுப்புகள் என இணையதளம் வழியே பாடங்கள் கற்றுத் தந்து மாணவர்களின் திறனை மேம்பட வழிகாட்டும் விதமாகச் செயல்படுகிறது இந்தத் தளம். மேலும் இத்தளத்தின் உதவியோடு கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் சாதனங்களைப் பற்றிய தகவல்களையும் வெளியிட்டு மற்ற மாணவர்களையும் ஊக்கப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

X