அறியவேண்டிய மனிதர்: ராஜ்கவுரி பவார்

4/27/2018 2:18:48 PM

அறியவேண்டிய மனிதர்: ராஜ்கவுரி பவார்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்தியாவைச் சேர்ந்தவர் டாக்டர் சுராஜ்குமார் பவார். இவர் இங்கிலாந்தில் மான்செஸ்டர் பகுதியில் வசித்துவருகிறார். இவரது மகள் ராஜ்கவுரி பவார்(12)  மகள் ராஜ்கவுரி அல்டிரின்சம் பகுதியில் உள்ள இலக்கணப் பள்ளியில் படித்துவருகிறார். இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள அதிபுத்திக் கூர்மையுள்ளவர்களுக்கான சங்கமான பிரிட்டிஷ் மென்சா 2017ம் ஆண்டு நடத்திய ஐக்கியூ தேர்வில் ராஜ்கவுரி கலந்துகொண்டார்.

18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் பங்கேற்ற இந்தத் தேர்வில் ராஜ்கவுரி 162 மதிப்பெண்கள் பெற்றார். இது சார்பியல் கோட்பாட்டைக் கண்டுபிடித்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஆல்ஃபிரட் ஐன்ஸ்டீன் மற்றும் பிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கின்சை விட 2 புள்ளிகள் அதிகம். இந்தத் தேர்வில் அதிகபட்ச திறனளவு 140 மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் ராஜ்கவுரி கூடுதல் புள்ளிகள் பெற்றார்.

இதையடுத்து ராஜ்கவுரியை தங்கள் சங்கத்தில் சேர பிரிட்டிஷ் மென்சா சங்கத்தினர் அழைப்பு விடுத்தனர். உலக அளவில் 20 ஆயிரம் பேர் இந்த அளவு புத்திக்கூர்மை உள்ளவர்களாக இருக்கும் நிலையில் அதில் ஒருவர் என்ற பெருமையை ராஜ்கவுரி பெற்றுள்ளார்.விஞ்ஞானி ஐன்ஸ்டீனைவிட அதிக புத்திக்கூர்மையுள்ளவராக இந்திய வம்சாவளி சிறுமி ஒருவர் திகழ்வதோடு, தங்கள் சங்கத்தில் சேர பிரிட்டிஷ் மென்சா சங்கம் அவருக்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

X