பார்க்கவேண்டிய இடம் : பாதாமி குடைவரைக் கோவில்

4/27/2018 2:21:06 PM

பார்க்கவேண்டிய இடம் : பாதாமி குடைவரைக் கோவில்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பாதாமி குடைவரைக் கோவில்கள் (Badami cave temples) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கொட் மாவட்டத்தின் பாதாமி என்னும் நகரில் உள்ளன. கி.பி. 6 ஆம் நூற்றாண்டு தொடங்கி 8 ஆம் நூற்றாண்டு வரை கர்நாடகத்தின் பெரும்பகுதியை ஆட்சிபுரிந்த சாளுக்கியர்களின் தலைநகரமாக பாதாமி, விளங்கியது. இந்த நகரம் இங்கு காணப்படும் மணற்கல் குன்றுகளில் குடையப்பட்டுள்ள பண்டைக்காலக் குடைவரைகளினால் பெயர் பெற்றது.

பாதாமி குடைவரைக் கோவில்கள் நான்கு குகைகளை உள்ளடக்கியுள்ளன. 6ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இவை மென்மையான தக்காணத்து மணற்கல் பாறைச் சரிவுகளில் குடையப்பட்டுள்ளன.முற்காலச் சாளுக்கியர்கள் என அழைக்கப்பட்ட சாளுக்கிய அரசர்களின் தலைநகரான பாதாமியில் அமைந்துள்ள நான்கு குகைக்கோவில்களும் ஆறாம் நூற்றாண்டிலிருந்து கட்டப்பட்டவை. நான்கில் மூன்றாவது குகையில் மட்டுமே, அக்குகை கட்டப்பட்ட ஆண்டுக்கான சான்றுள்ளது. இக்குகையில் காணப்படும் கன்னட மொழியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில், சாளுக்கிய அரசன் மங்களேசனால் கிபி 578/579 இல் இக்குகையின் கருவறை நிர்மாணிக்கப்பட்டதாகக் குறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டிலிருந்து இக்குகைக் கோவில்களின் காலம் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது.

பிற்காலத்தில் இப்பகுதியில் கட்டப்பட்ட இந்துக் கோவில்களுக்கு முன்னோடியாகவும் ‘இந்துக் கோவில் கட்டடக்கலையின் தொட்டில்’எனவும் கருதப்படும் பாதாமி குகைக்கோவில் வளாகம், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்கள் பட்டியலில் மலப்பிரபா ஆற்றுப் பள்ளத்தாக்கில் ‘கோவில் கட்டடக்கலையின் வளர்ச்சி - பாதாமி-பட்டடக்கல்‘ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது சிறப்பு. மேலும் அறிய https://ta.wikipedia.org/wiki/பாதாமி_குடைவரைக்_கோவில்கள்

X