படிக்க வேண்டிய புத்தகம்: வெற்றியின் ரகசியம் சிந்தை ஜெயராமன்

4/27/2018 2:23:14 PM

படிக்க வேண்டிய புத்தகம்: வெற்றியின் ரகசியம் சிந்தை ஜெயராமன்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

அடுத்த வேளை உணவுக்கே அல்லல்படும் ஒரு சாமானியன், சென்னை கல்வியியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் தலைவரான வெற்றிக் கதையை எளியநடையில் விளக்குகிறது இந்நூல். தன் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், சாதாரண குடும்பத்தில் ஒரு சாமானியனாக பிறந்தது முதல் தன் வாழ்க்கைச்சூழலில் எதிர்கொண்ட போராட்டங்கள், சோதனைகளைக் கடந்து சிறந்த கல்வியாளர் விருது வாங்கியது வரை என தன் வெற்றியின் ரகசியத்தை உணர்வுபூர்வமாக வாசகனுக்கு விவரித்திருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் சிந்தை ஜெயராமன்.

தன்னுடைய குடும்பத்தின் நிலை, உறவுகள், தன்னுடைய கனவுகள், முயற்சிகள், போராட்டங்கள், தோல்விகள் என அனைத்தையும் அத்தியாயம் அத்தியாயமாகப் பிரித்து அலங்கார வார்த்தைகள் இல்லாத சாமானிய மொழியில் எழுதி வாசகனுக்கு தன்னுடைய வெற்றியின் ரகசியத்தை மென்மையாகக் கடத்தியதே இந்நூலின் தனிச்சிறப்பு.(வெளியீடு: வினோத் பதிப்பகம், 4A, முதல் பிரதான சாலை, லட்சுமிபுரம்,  திருநின்றவூர்- 602 204. விலை: ரூ.299. தொடர்புக்கு: 044-2639 0525)

X