பார்க்கவேண்டிய இடம்: திகம்பர் ஜெயின் கோவில் - ஆற்காடு

6/8/2018 11:41:20 AM

பார்க்கவேண்டிய இடம்: திகம்பர் ஜெயின் கோவில் - ஆற்காடு

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே அமைந்துள்ளது திகம்பர் ஜெயின் குகைக்கோவில். ஆற்காட்டிலிருந்து 7 கிமீ தொலைவில் கண்ணமங்கலம் செல்லும் பாதையில் உள்ளது. இது 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. (மேலும் பஞ்ச பாண்டவ மலை என அழைக்கப்படுகிறது)  அந்த நேரத்தில் கட்டப்பட்ட சிற்பத்தில் மகேந்திரவர்மனின் பாணி தெரிகிறது.

ஆனால், இக்கோவில் பற்றிய கல்வெட்டுகள், கட்டுரைகளில் தெளிவான சான்றுகள் இல்லை. இந்தக் குடைவரைக் கோவில் கல்வெட்டு சிற்பங்களோடு பின்புறம் 6 மற்றும் முன்பு 6 என மொத்தம் 12 தூண்கள் கொண்டுள்ளது.மேலே ஜெயின்  சிற்பங்கள், தமிழ் கல்வெட்டுகள்  மற்றும் சில மொகலாய கல்லறைகள் உள்ளன. 10வது நூற்றாண்டு திகம்பர் ஜெயின் கோவிலுக்கு  மேலே சென்று அடைய படிக்கட்டுகள் உள்ளன.
மேலும் அறிய http://tamilinfobook.blogspot.in

X