அறிய வேண்டிய மனிதர்: கோவிந்தராஜன் பத்மநாபன்

6/8/2018 11:43:18 AM

அறிய வேண்டிய மனிதர்: கோவிந்தராஜன் பத்மநாபன்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த கோவிந்தராஜன் பத்மநாபன் இந்தியாவின் தலைசிறந்த  உயிர்வேதியியலாளர் மற்றும் உயிர்தொழில்நுட்ப வல்லுநரும் ஆவார். பொறியியலாளர் குடும்பத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப் படிப்பை சொந்த ஊரில் தொடங்கினாலும் பள்ளிப்படிப்பையும் இளங்கலையையும் பெங்களூருவில் படித்து முடித்தார்.

எஞ்சினியரிங் சேர்ந்த கொஞ்ச நாளிலேயே அதன்மீது தனக்கு இயற்கையிலேயே ஆர்வம் இல்லை எனத் தெரிந்துகொண்டு சென்னையில் உள்ள பிரசிடென்ஸி கல்லூரியில் வேதியியலில் தனது இளங்கலையை முடித்தார். பிறகு டில்லியில் உள்ள இந்தியன் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் யுனிவர்சிட்டியில் சாயில் கெமிஸ்டிரி துறையில் முதுகலையும், பெங்களூரூவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸில் உயிர்வேதியியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.

தடுப்பூசி மேம்பாடு, கல்லீரலில் உள்ள மரபணுக்களை நகலெடுத்தல், உயிரிசெல்களின் செயல்பாடுகள், மலேரியா ஒட்டுண்ணிகளைத் தடுக்கும் வழிமுறைகள், மலேரியாவைக் குணப்படுத்தும் மருந்து (Curcumin) எனப் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

இவரின் சாதனைகளைப் போற்றும் வண்ணம் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், சாந்தி ஸ்வரூப் பட்நாகர் என இந்தியாவின் உயர்ந்த விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது இந்திய அரசு.மேலும் இவரைப்பற்றி அறிந்துகொள்ள https://en.wikipedia.org/wiki/Govindarajan_Padmanaban

X