வாசிக்க வேண்டிய வலைத்தளம் : www.siruthozhilmunaivor.com

8/28/2018 3:00:02 PM

வாசிக்க வேண்டிய வலைத்தளம் : www.siruthozhilmunaivor.com

நன்றி குங்கும் கல்வி-வேலை வழிகாட்டி

காலத்திற்கு ஏற்ற விதவிதமான சிறுதொழில்களின் வகைகள், அச்சிறு தொழில்களுக்கான தொழில்நுட்பப் பயிற்சிகள், மார்க்கெட்டிங் நுணுக்கங்கள் என சுயதொழில் செய்ய விருப்பமுள்ள இளைய தலைமுறைக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது இத்தளம். இதில் சுயதொழில், தொழில்வாய்ப்புகள், விவசாயம், மார்க்கெட்டிங், தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு ஆகிய பகுதிகளை உள்ளடக்கி தகவல்கள் பதிவிடப்படுகின்றன.

மேலும் சிறுதொழில் பயிற்சிகளை வழங்குதல், உற்பத்திப் பொருளைச் சந்தைப்படுத்துதல், அரசு தரும் சலுகைகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், தொழில்முனைவோருக்கு இருக்கவேண்டிய ஆளுமைப் பண்புகளை கற்றுத் தருதல் என சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளோருக்கு ஆதி முதல் அந்தம் வரை வழிகாட்டும் தகவல்களின் பெட்டகமாக உள்ளது இத்தளம்.

 

 

 

 

X