பார்க்க வேண்டிய இடம் : வைணு பாப்பு வானாய்வகம்

8/28/2018 3:01:49 PM

பார்க்க வேண்டிய இடம் : வைணு பாப்பு வானாய்வகம்

நன்றி குங்கும் கல்வி-வேலை வழிகாட்டி

வேலூர் மாவட்டத்தின் ஜவ்வாது மலைகளில் அமைந்துள்ள சிறிய கிராமமான காவலூர் எனும் இடத்தில் இந்திய வானியற்பியல் நிலையத்தின் முதன்மை வானாய்வகமான வைணு பாப்பு வானாய்வகம் அமைந்துள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி கொண்ட வானாய்வகம் என போற்றப்படும் இவ்வானாய்வகம் இயற்கை எழில் கொஞ்சும் பசுமைக் காடுகள் நிறைந்த மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது.

1985 ஆம் ஆண்டு 234 செ.மீ. விட்டமுள்ள தொலைநோக்கி இவ்வானாய்வகத்தில் நிறுவப்பட்டது. இதன் மூலம் உலகின் பெரிய தொலைநோக்கிகள் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்தது.

கண்கவர் காடுகளைக்கொண்ட சுற்றுலாத்தலமாக கருதப்படும் ஜவ்வாது மலைகளின் சிறிய கிராமமான காவலூரானது வானியல் மாற்றங்களை உற்றுக் கவனிக்க ஏற்ற இடமாக கருதப்பட்டதன் விளைவாகவே வானாய்வகம் இங்கு நிறுவப்பட்டது.மேலும் தகவல்கள் அறிய https://en.wikipedia.org/wiki/Vainu_Bappu_Observatory

X