படிக்க வேண்டிய புத்தகம் : இந்திய விண்வெளி இயலின் தந்தை விக்ரம் சாராபாய் - எம்.ஏ. பழனியப்பன்

8/28/2018 3:05:17 PM

படிக்க வேண்டிய புத்தகம் : இந்திய விண்வெளி இயலின் தந்தை விக்ரம் சாராபாய் - எம்.ஏ. பழனியப்பன்

நன்றி குங்கும் கல்வி-வேலை வழிகாட்டி

விண்வெளி ஆய்வாளர், சிறந்த நிர்வாகி என பன்முகத் திறமை கொண்டு விளங்கிய விக்ரம் சாராபாயின் வாழ்க்கை வரலாறு வளரும் தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடமாகும். இந்திய விண்வெளி இயலின் தந்தை என போற்றப்படும் விக்ரம் சாராபாயின் பால்ய காலம் தொட்டு உலகமே போற்றும் மாமனிதனாக மாறிய காலம் வரையிலும் அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து எளிய நடையில்  விவரிக்கிறது இந்நூல்.

ஆராய்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்ட விக்ரம் என்ற சிறுவனின் குடும்பச் சூழல் தொடங்கி சமூக அக்கறை, அறிவியல் மற்றும் தொழில் துறைகளில் தனித்திறன் கொண்டு விளங்கிய விண்வெளியாளரின் சாதனை வரை இன்றைய தலைமுறை அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களைத் தேடி தேடி தொகுத்திருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் எம்.ஏ. பழனியப்பன்.

மேலும் சாராபாய்-அப்துல் கலாம் சந்திப்புகள், இந்திய அறிவியலின் மகாத்மா என அப்துல் கலாம் சாராபாயை புகழ்ந்த தருணம், விக்ரம் சாராபாயின் கடைசிப் பேச்சு போன்ற அத்தியாயங்கள் தன்னம்பிக்கை உணர்வையும் உத்வேகத்தையும் மேலிடச்செய்கிறது. (வெளியீடு: ஸ்ரீசெண்பகா பதிப்பகம், தபால் பெட்டி எண்: 8836, பாண்டி பஜார், சென்னை  600 017. விலை: ரூ.50. தொடர்புக்கு: 044-28611510)

X