அறிய வேண்டிய மனிதர் : அஜய் வி. பட்

10/8/2018 3:18:26 PM

அறிய வேண்டிய மனிதர் : அஜய் வி. பட்

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி


இன்றைய நவீன காலத்து கம்ப்யூட்டர் டெக்னாலஜியின் முன்னோடியாக கருதப்படும் அஜய் வி. பட் செப்டம்பர் 6, குஜராத் மாநிலத்தின் வதோதராவில் 1957-ல் பிறந்தார். இந்தியாவின் சிறந்த கம்ப்யூட்டர் ஆர்க்கிடெக்ட்டான இவர் ‘மஹாராஜா சாயாஜி ராவ் யுனிவர்சிட்டி ஆஃப் பரோடாவில்’ இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன்பின் யுனைடெட் ஸ்டேட்ஸின் ‘தி சிட்டி யுனிவர்சிட்டி ஆஃப் நியூயார்க்‘ என்ற அமெரிக்க பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

1990 ஆம் ஆண்டு இன்டெல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த இவர் தன் தொழில்நுட்ப அறிவாற்றல் காரணமாக பணிக்குச் சேர்ந்த குறுகிய காலத்திலேயே இன்டெல் நிறுவனத்தின் முதன்மை கம்ப்யூட்டர் ஆர்க்கிடெக்ட்டாக ஆனார். இவர் கண்டுபிடித்த USB (Universal Serial Bus), AGP (Accelerated Graphics Port), PCI Express போன்றவை இவருக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது.

இன்றைய கணினி சார்ந்த ஒவ்வொரு பொருட்களிலும் இவரது கண்டுபிடிப்பு பல விதங்களில் பயன்படுகிறது. தன் நிறுவனத்தின் ராக் ஸ்டார் என இன்டெல் நிறுவனம் இவரைக் கொண்டாடியது. மேலும் நவீன கணினி இணைப்புச் சாதனங்கள் மற்றும் அதிவேக தொலைத்தொடர்புச் சாதனங்கள் போன்ற இவரின் கண்டுபிடிப்புகளுக்கு 2002ம் ஆண்டில் ‘அச்சீவ்மென்ட் இன் எக்செலன்ஸ்‘ எனும் விருது அளித்து பெருமைப்படுத்தியது அமெரிக்கா.

X