பார்க்கவேண்டிய இடம் : அழகன்குளம்

10/8/2018 3:21:14 PM

 பார்க்கவேண்டிய இடம் : அழகன்குளம்

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சியில் உள்ள கிராமமான அழகன்குளம் பாண்டியர்களின் காலத்தில் ஒரு துறைமுக நகரமாக விளங்கியது. இவ்வூர் துறைமுகத்தின் வழியாகத்தான் பண்டைய தமிழர்கள் ரோம் போன்ற பல வெளிநாடுகளுடன் வாணிபத் தொடர்புகொண்டிருந்துள்ளனர். மன்னராட்சி நடைபெற்ற இப்பகுதியின் பெயர் அழகாபுரி ஆகும். பின்னர் அழகாபுரி என்ற பெயர் மருவி அழகன்குளம் என்று அழைக்கப்பட்டுவருகின்றது.

மன்னர்கள் ஆட்சி செய்ததற்குச் சான்றாகச் சிதிலமடைந்த கோட்டை மண்ணில் புதையுண்டு அந்தப் பகுதி மேடாகக் காட்சியளிக்கிறது. அந்தப் பகுதியில் இருந்து கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொல்லியல் துறையினரால் வாள், கேடயம், பொற்காசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வடக்கே பாக் நீரிணையும், தெற்கே வைகை ஆறும், கிழக்கே வைகை முகத்துவாரமும், மேற்கே பனைக்குளம் கிராமமும் இக்கிராமத்தின் எல்லைகளாக உள்ளன.

X