படிக்கவேண்டிய புத்தகம் : இரண்டாம் சுற்று - ஆர்.பாலகிருஷ்ணன்

10/8/2018 3:27:23 PM

படிக்கவேண்டிய புத்தகம் : இரண்டாம் சுற்று - ஆர்.பாலகிருஷ்ணன்

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி

தமிழ் இலக்கிய மாணவன் ஒருவன், இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தமிழில் தேர்வெழுதி முதல் முயற்சியில் வென்றது, இந்திய ஆட்சிப் பணியாளராக வலம்வந்தது, மாநில வளர்ச்சி ஆணையர், திராவிடவியல் மற்றும் இந்தியவியல் ஆய்வாளர் எனப் பன்முகம்கொண்டு வாழ்வியல் அனுபவங்களின் தொகுப்பாக உருவாக்கப்பட்டுள்ளது இந்நூல்.

மனித வாழ்க்கையில் இரண்டாம் சுற்று என்று உண்மையில் எதுவும் உள்ளதா? என்ற கேள்வியை மையமாக வைத்து விடாமுயற்சி, கடின உழைப்பு, நேரம் தவறாமை என ஆளுமை வளர்க்கும் பண்புகளைச் சொல்லியும், எதார்த்த உலகின் நடைமுறை வாழ்க்கையின் தத்துவார்த்த உண்மைகளையும் தனது அனுபவங்களின் ஊடாகப் பேசுகிறார் இந்நூலின் ஆசிரியர் ஆர்.

பாலகிருஷ்ணன். வாழ்க்கை எனும் தொடர் ஓட்டத்தில் ‘இது எனது இரண்டாம் சுற்று’ என்று நெகிழ்ந்து உணர்ந்த தருணங்களைக் கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் தொகுத்து வாழ்க்கைப் பயணத்தில் அன்பு, அறம் மற்றும் மனிதநேயத்தின் முக்கியத்தைப் போதிக்கிறது இந்நூல். இந்நூலைப் படிக்கும் அனைவருக்கும் அனுபவங்கள் தரும் பாடத்தைப் புரிந்துகொள்ள வழிசெய்யும்.

(வெளியீடு: எஸ்.ஆர்.வி. தமிழ்ப் பதிப்பகம், சமயபுரம், திருச்சி  621112. விலை: ரூ.240.)

X