12ஆம் வகுப்பு ஆங்கிலம் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்!

11/6/2019 12:38:36 PM

12ஆம் வகுப்பு ஆங்கிலம் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

‘‘தமிழ்வழி பயிலும் மாணவர்களுக்குப் பெரும்பாலும் ஆங்கிலப் பாடம் என்றால் சற்று கடினமாக உணர்வார்கள். ஆனால், அப்படி பயப்பட வேண்டியதில்லை. அடிப்படை ஆங்கிலத்தை முழுமையாக கற்றால் மிக சுலபமாக அதிக மதிப்பெண்களை பெறலாம். Nothing is impossible. The word itself says I-(a)m-possible. ‘முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்’ என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க இரவு பகல் பாராது அயராது படித்துக் கொண்டிருக்கும் மாணவச் செல்வங்களே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவது சுலபம்’’ என்கிறார் கோவை பீளமேடு ஏ.பி.சி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆங்கில ஆசிரியர் ஜெயசுதாகரன் எம்.ஏ., பி.எட். அவர் தரும் ஆலோசனைகளைப் பார்ப்போம்…

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு English question paper நான்கு பகுதிகளாக மொத்தம் 90 மதிப்பெண்களைக் கொண்டது. இதில் 1 மதிப்பெண் வினாக்கள் 1 - 20 (அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்), 2 மதிப்பெண் வினாக்கள் 21-30(4-க்கு விடையளிக்க வேண்டும்), 3 மதிப்பெண் வினாக்கள் 31-40(7 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்), 5 மதிப்பெண் வினாக்கள் 41 - 47(அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்) என கொடுக்கப்பட்டிருக்கும்.

Part 1-ல் 1-3 வினாக்களில் synonyms, 4-6 வினாக்களில் Antonyms கேட்கப்படும். இதற்கு நீங்கள் ஒவ்வொரு பாடத்திலும் உள்ள Glossary மற்றும் கடின வார்த்தைகளைப் படிக்கவேண்டும். (முக்கிய பக்க எண்கள் 6, 39, 71). வினா எண் 7 முதல் 20 வரை முழுமதிப்பெண் பெற பின்வரும் தலைப்புகளில் பயிற்சி அவசியம்.

Compound Words (formation combining two lexemes)  Prefixes and suffixes,Abbreviations and Acronyms, Clipped Words, Definitions of Words,Phrasal Verbs (substitute with single words and vice versa), Common Idioms, Confusable, Foreign Words and Phrases, Substitute words/phrases with polite alternatives, Modal Verbs and Semi-modals, Prepositions Question Tags, Syllabification, American English and British English, Singular and Plural, Sentence Patterns.

Part II-ல் வினா எண் 21 முதல் 26 வரை section 1-ல் Poetry Appreciation/Figures of Speech கேட்கப்படும். இதற்கு நீங்கள் 6 Poem-களிலும் உள்ள புத்தக வினாக்களையும் poem உள்ளே இருந்தும் வினாக்கள் கேட்கப்படுவதால் poem-களை நன்கு பொருளுணர்ந்து படிக்கவேண்டும்.

வினா எண் 27 முதல் 30 வரை section 2-ல் (Do as directed) Grammar கேட்கப்
படும். இதில் Direct and Indirect Speech, Active Passive Voice, Simple Compound and Complex sentences, Conditional Clauses ஆகியவை வரும். இதில் முழுமதிப்பெண் பெற அதிக பயிற்சி அவசியம்.

Part III-ல் வினா எண் 31 முதல் 33 வரை section 1-ல் poem ERC ஆக வரும். இதில் நீங்கள் 2 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.

section 2-ல் வினா எண் 34 முதல் 36 வரை Prose Question Answer ஆக வரும்.இதில் நீங்கள் 2 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.

section 3-ல் வினா எண் 37 முதல் 40 வரை (Topics for testing) ஆக வரும். நீங்கள் 3 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இதில் முழுமதிப்பெண் பெற கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி
அவசியம்.

Dialogue Writing of minimum three exchanges (completion/Fill in the blanks), Verbal and Non verbal Representation (tables, pie-charts, graphs, maps asking questions or analytical interpretation of data), Describing a Process Completion of Proverbs/Match with meanings/Semantic Fields, Notice Writing, Expansion of Headlines E-mail Writing, Spot the Errors/Fill in the blanks Homophones, link words, concord, Framing questions, words with different grammatical functions, tenses, determiners, prepositions, Rearrange the words and phrases to make meaningful sentences.

Part IV-ல் வினா எண் 41 prose paragraph ஆக கேட்கப்படும். இதற்கு முதல் மூன்று Prose Paragraph அனைத்தையும் படிக்க வேண்டும். வினா எண் 42 Poem Paragraph ஆக கேட்கப்படும். இதற்கு முதல் மூன்று Poem Paragraph அனைத்தையும் படிக்க வேண்டும்.அதற்கேற்ப வினா எண் 43 Supplementary Paragraph ஆக கேட்கப்படும். இதற்குக் கொடுக்கப்படும் Hints-ஐ முழுமையாகப் புரிந்து அதற்கேற்ப விடையளிக்க வேண்டும்.

வினா எண் 44 write a summary or note making ஆக வரும். இதில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்து விடையளிக்க வேண்டும். வினா எண் 45 letter writing வினாவாக வரும் இதில் மறக்காமல் சுயவிவரம்(bio-data) இணைக்கப்படவேண்டும். வினா எண் 46 spot the error (or) Homophones, Modal verbs, Tenses etc பகுதிகளிலிருந்து வரும். வினா எண் 47 semantic field (or)prose comprehension ஆக வரும்.

குறிப்பு: வினா எண் 46, 47 ஆகியவற்றில் சில சமயம் கீழ்க்காணும் தலைப்புகளிலிருந்தும் வரும். எனவே, மாணாக்கர்கள் இத்தலைப்புகளிலும் பயிற்சி பெறுதல் அவசியம்.

Writing Biographical sketch from the given information / Writing a report using information given, Prose Comprehension/Poetry Comprehension, Paragraph writing on a general topic/Expansion of Proverbs/Report Writing/Construction of dialogues for the given situation / Developing hints into a story unknown மாணவர்களே மேலே கொடுக்கப்பட்ட குறிப்புகளைப் பின்பற்றி படித்து அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகள்!

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

மேலும்

X