தேவைக்கேற்ப தேர்ந்தெடுங்கள் தொழில்நுட்பப் படிப்புகளை!

1/7/2020 5:07:12 PM

தேவைக்கேற்ப தேர்ந்தெடுங்கள் தொழில்நுட்பப் படிப்புகளை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

* வழிகாட்டல்

அறிவுத் திறன் வளர்ச்சிக்காகக் கல்வி என்ற நிலை மாறி வேலைவாய்ப்புக்காகவும் பொருளாதார நலனுக்காகவுமானதாக ஆகிவிட்டது கல்வி. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வேலைவாய்ப்புச் சந்தையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும். இது காலத்தின் கட்டாயம். எதிர்காலத்தை மனதில் நிறுத்தி திட்டமிட்டு தொழில்நுட்பப் படிப்பை தேர்வு செய்யவேண்டும்.

தற்போது உள்ள வேலைவாய்ப்புச் சூழலுக்கேற்ற படிப்புகள் பற்றி கேட்டதற்கு ஹிந்துஸ்தான் கல்விக் குழும இயக்குநர் அசோக் வர்கீஸ் கூறுகையில், ‘‘இளங்கலைப் பாடத் திட்டங்கள், முதுகலைப் பாடத் திட்டங்கள், பட்டயப் படிப்புகள், ஆராய்ச்சி மற்றும் முனைவர் பட்டங்கள் என ஏராளமான துறைகளில் படிக்கலாம். குறிப்பாகப் பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை, கட்டுமான தொழில்நுட்பம், கலை, அப்ளைடு சயின்ஸ், வடிவமைப்பு, சுகாதார அறிவியல், சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பட்டப்படிப்புகள் இருக்கின்றன. இந்தக் காலத்துக்கு ஏற்றாற்போன்று பல்வேறு தொழில் பிரிவுகளுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் வகையில் பாடங்கள் உள்ளன.

மரபுசாரா எரிசக்தி, சைபர் செக்கியூரிட்டி, வியோனிக்ஸ், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. தொழில்நுட்பத் திறன் படைத்த நபர்களுக்கான தேவை மிகப்பெரிய அளவுக்கு உள்ளது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் எங்கள் கல்வி நிறுவனத்திலும்கூட புதிய புதிய பாடப் பிரிவுகளைக் கண்டறிந்து அவற்றை மாணவ-மாணவிகளுக்குக் கற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு உலகை ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை எனப் பல்வேறு நிறுவனங்கள் ஆய்வு செய்து பட்டியலிட்டுள்ளன.  

முப்பரிமாண அச்சு (3D Printing), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), ரோபோட்டிக்ஸ், ஆளில்லா விமானங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) உள்ளிட்ட பல தொழில்நுட்பங்கள் இதில் உண்டு’’ என்றார்.மேலும் தொடர்ந்த அவர், ‘‘இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் விதமாக நான்காம் தொழில் புரட்சி என்று சொல்லும் அளவுக்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய மாற்றத்துக்கு ஏற்ப கல்வி அமைப்பை மேம்படுத்தும் வகையில் ஹிந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்விநிறுவனம் பல்வேறு படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இணைய வழி நுழைவுத் தேர்வுக்கான தேதிகளையும் அறிவித்துள்ளது.கற்றல் மற்றும் கற்பித்தல் நடைமுறைகளில் செயல்முறை ரீதியான அம்சங்களை அறிமுகப்படுத்தினால் அது மாணவர்களின் ஆழ்மனம் வரை சென்று பதியும். மேலும் எந்த ஒரு தொழில்நுட்ப நுணுக்கத்தையும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கித் தருவதுடன், ஆராய்ச்சி ரீதியான அம்சங்களைத் தெரிந்துகொள்ளவும் உதவிடும். மேலும், தொழில் துறைக்கு இப்போதைக்குத் தேவைப்படும் அம்சங்கள் குறித்து நன்கு தெளிவான ரீதியில் விஷயங்களை அறிந்துகொள்ளவும் செயல்முறை ரீதியான கற்றல் மற்றும் கற்பித்தல் முறை பயன்படும்.’’ என்கிறார் அசோக் வர்கீஸ்.

- தோ.திருத்துவ ராஜ்

மேலும்

X