+2 கணக்குப் பதிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்

1/8/2020 3:03:58 PM

+2 கணக்குப் பதிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

* பொதுத் தேர்வு டிப்ஸ்

பன்னிரண்டாம் வகுப்புக் கணக்குப் பதிவியல் (Accountancy) பாடத்தில் எளிதில் தேர்ச்சி மற்றும் அதிக மதிப்பெண் பெற மதுரை மாவட்டம் எம்.எல்.டபிள்யூ.ஏ. மேல்நிலைப் பள்ளி (Run by Jain Educational& Empowerment Trust) ஆசிரியர் எம்.முத்துச்செல்வம் PG Asst (Commerce) ஆசிரியர் தரும் ஆலோசனைகளைப் பார்ப்போம்…‘

‘பதற்றமில்லாமல் தெளிவாக விடையளிக்க வினாத்தாள் அமைப்பைத் தெரிந்துகொள்ள வேண்டும். கணக்குப் பதிவியல்பாடத்துக்கு மொத்தம் 90 மதிப்பெண்கள். மீதம் 10 மதிப்பெண்கள் அசஸ்மென்டுக்கு வழங்கப்படும். வினாத்தாளில் முதலில் பகுதி ‘அ’-வில் 20 சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக கொடுக்கப்பட்டிருக்கும். அதில் குறைந்தது 15 கேள்விகள் பாடத்தின் பின் பகுதியில் கேட்கப்பட்ட சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுகவிலிருந்து கேட்கப்பட்டிருக்கும். மீதமுள்ள 5 கேள்விகள் பாடத்தின் உள்பகுதியிலிருந்து நீங்கள் பாடத்தை எவ்வாறு புரிந்து படித்துள்ளீர்கள் என்பதைப் பொறுத்து மிக எளிதாக விடையளிக்கும் வகையில் இருக்கும்.

பகுதி ‘ஆ’-வில் (வினா எண் 21-30) 2 மதிப்பெண் வினாக்கள் 10 கொடுக்கப்பட்டு, 7 வினாக்களுக்கு விடை எழுதவேண்டும். அதில் வினா எண் 30 (கட்டாய வினா) நேரடி வினாவாக இருக்காது. அதாவது, பாடத்தின் உள்பகுதியிலிருந்து பாடப் பொருள் நீங்கள் எவ்வாறு புரிந்துள்ளீர்கள் என்பதைச் சோதிப்பதாக அமையும். பகுதி ‘இ’-ல் (வினா எண் 31-40)3 மதிப்பெண் வினாக்கள் 10 கொடுக்கப்பட்டு, 7 வினாக்களுக்கு விடை எழுதவேண்டும்.அதில் வினா எண் 40 (கட்டாய வினா) நேரடி வினாவாக இருக்காது.

அதாவது, பாடத்தின் உள்பகுதியிலிருந்து நீங்கள் பாடத்தை எவ்வாறு புரிந்துள்ளீர்கள் என்பதைச் சோதிப்பதாக அமையும். பகுதி ‘ஈ’-ல் (வினா எண் 41-47)5 மதிப்பெண் வினாக்கள் 7 கொடுக்கப்பட்டு அதில் இரு வினாக்களில் ஏதேனும் ஒன்று எனஅனைத்து வினாவிற்கும் பதிலளிக்க வேண்டும்.பொதுவாக வினா எண் 30 மற்றும் 40 ஆகிய கட்டாய வினாக்கள் பக்கம் பக்கமாக எழுத வேண்டிய அவசியம் இருக்காது. மாறாகக் கேள்வியின் பொருள்புரிந்து நீங்கள் சொந்தமாக யோசித்து மிகச் சரியான விளக்கத்தை அளிக்க வேண்டும்.

மிக எளிதாகக் கணக்குப் பதிவியலில் மதிப்பெண் பெற

கணக்குப் பதிவியல் படிக்க அடிப்படையாக கூட்டல், கழித்தல்,பெருக்கல், வகுத்தல் நன்கு தெரியவேண்டும். அதற்கு வாய்ப்பாடு மற்றும் கணக்குகளைப் பலமுறை செய்து பழகியிருக்க வேண்டும். இந்த அடிப்படை தகுதியோடு பின்வரும் பாடங்களில் கவனம் செலுத்தினால் தேர்ச்சி பெறுவது சுலபமாகும்.

நமது புதிய பாடப்புத்தகத்தில் பாடம் 1: முழுமை பெறாத பதிவேடுகளிலிருந்து கணக்குகளிலிருந்து விடுபட்ட தகவல்களைக் காணுதல், நிலை அறிக்கை தயாரிப்பதன் மூலம் முதலைக் காண்பது, மொத்த கடனாளி கணக்குகள் மூலம் கடன் விற்பனை, மொத்த கடனீந்தோர் கணக்குகள் மூலம் கடன் கொள்முதல் காணுதல்

பாடம் 2 : இலாப நோக்கமற்றஅமைப்புகளின் கணக்குகளிலிருந்து பெறுதல் மற்றும் செலுத்தல்கள் கணக்குகள் தயாரிப்பு, வருவாய் மற்றும் செலவினக் கணக்குகள் தயாரிப்பு, சந்தா கணக்குகள், பயன்படுத்தக்கூடிய பொருள்கள் எவ்வாறு வருவாய் செலவினக் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பில் தோன்றும்.

பாடம் 3: கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் அடிப்படைகளில் நிலை முதல் கணக்குகள், மாறுபடும் முதல் கணக்குகள், முதல்மீது வட்டி, எடுப்புகள் மீது வட்டி, இலாப நட்ட பகிர்வு கணக்குகள் தயாரிப்பது.

பாடம் 4: கூட்டாண்மைக் கணக்குகள்-நற்பெயர்பாடத்தில் சராசரி இலாபம், உயர் இலாப முறையில் நற்பெயரைக் காண்பது.

பாடம் 8. நிதிநிலை அறிக்கைபகுப்பாய்வில் ஒப்பீட்டு அறிக்கை பகுப்பாய்வு, பொது அளவு அறிக்கை, போக்கு ஆய்வு போன்ற கணக்குகள் மிக எளிமையாகச் செய்யக்கூடியவை.

பாடம் 10:  கணினி கணக்கியல்முறையில் Tally-ஐதிறம்படக் கற்றுக்கொண்டால் நீங்கள் பிற்காலத்தில் ஒரு வியாபார நிறுவனத்தில் வேலைக்குச் சென்றால் உங்கள் கல்வித் தகுதியுடன் Tally- யும் உங்களுக்குத் தெரிந்தால் உங்களுக்கான வேலைவாய்ப்பு உறுதி. எனவே, மாணவர்கள் இந்தப் பாடத்தை ஆர்வமுடன் கற்கவேண்டும். மேலும் புதிய பாடத்திட்டம்மாற்றியமைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று கால ஓட்டத்திற்கு ஏற்ப கணக்குப் பதிவியலில் சேர்க்கப்பட்டுள்ள பாடப் பகுதிகளைக் கவனத்தோடு புரிந்துபடித்தால் அச்சமின்றித் தேர்வை எதிர்கொள்ளலாம்.

அடிப்படைக் கணித அறிவின் துணையோடு கணக்குப் பதிவியல் பாடத்தின் விதிகள் கோட்பாடுகளைக் கவனச் சிதறலின்றி கற்றால் கவலையின்றி தேர்வை எதிர்கொள்வது மட்டுமில்லாமல் நல்ல மதிப்பெண்களைப் பெற்று நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள முடியும். உலகமயமாக்கல் காரணமாகப் பெருகிவரும் பன்னாட்டு நிறுவனங்களில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள் குறிப்பாகப் பட்டயக் கணக்காளர்கள் தேவை அதிகரித்துள்ளது. எனவே, அன்பிற்குரிய வணிகவியல் பாடப்பிரிவு மாணவர்கள் இதை அறிந்துகொண்டு முன்னேற வேண்டும்.‘முழுமையாக முறையாகக் கற்போம் அதிக மதிப்பெண் எடுப்போம்’ என முழு வீச்சில் செயல்படும் நேரம் வந்து விட்டது. எதிர்வரும் மார்ச் 2020 பொதுத் தேர்வில் சிறப்பாகச் செயல்பட என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

பாடம் 1 முழுமை பெறாதபதிவேடுகளிலிருந்து கணக்குகளின் எளிய வீடியோ link -ஐ இத்துடன் இணைத்துள்ளேன். பார்த்துப் படித்து பயன்பெறலாம். 1) லாபநட்ட அறிக்கை - https://youtu.be/jnGbbb-F_MY2) நிலை அறிக்கை -https://youtu.be/QD0wTgKaJ0s 3) பெறுதற்குரிய மாற்றுசீட்டு-https://youtu.be/k2NfWfB9dFM 4) செலுத்துதற்குரிய மாற்றுசீட்டு-https://youtu.be/OueTA11ktGo  5) முழுமை பெறாத பதிவேடுகளிலிருந்து இறுதிக் கணக்கு தயாரித்தல்-https://youtu.be/rYKQpHGAmLw

பாடம்-2 : இலாப நோக்கமற்றஅமைப்புகளின் கணக்குகள்: 1) பெறுதல் மற்றும்செலுத்துதல் கணக்கு-https://youtu.be/khtq_VBTT98 2) சந்தா கணக்கு-https://youtu.be/qC24mvaSi0A 3) பயன்படுத்தப்பட்ட பொருள்களுக்கான கணக்குகள்-https://youtu.be/31Ayf1Occ60 4) முதல் நிதி-https://youtu.be/xaiHpsx8cys 5) இருப்புநிலை குறிப்பு-https://youtu.be/GokFHcQ6UNQ(இவர்தரும் மாதிரி வினாத்தாள் அடுத்தடுத்த பக்கங்களில்…)

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

மேலும்

X