டி.என்.பி.எஸ்.சி. சூப்பர் டிப்ஸ்

1/6/2017 2:20:52 PM

டி.என்.பி.எஸ்.சி. சூப்பர் டிப்ஸ்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

போட்டித் தேர்வு டிப்ஸ்

அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள

முனைவர் ஆதலையூர் சூரியகுமார்

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கும் பணியாளர்களைத் தேர்வு செய்யும் டி.என்.பி.எஸ்.சி. அமைப்பின் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 போன்ற அனைத்துத் தேர்வுகளிலும் பங்குகொண்டு வெற்றிபெறுவதற்கான வழிகாட்டவே இப்பகுதி.

இதில் தொடர்ந்து இந்தியாவைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகள், சம்பவங்கள், சுதந்திரப் போராட்டத்தின் நிகழ்வுகளையெல்லாம் பார்த்துவந்தோம். அதன் தொடர்ச்சியாகச் சில நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்…

* போருக்குப்பின் இந்தியருக்கு வழங்கப்பட்டது - டொமினியன் அந்தஸ்து

* காந்தியடிகள் கிரிப்ஸ் தூதுக்குழு உறுதி மொழிகளை ‘திவாலாகிக்கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை’என்று குறிப்பிட்டார்.

* வெள்ளையனே வெளியேறு இயக்கம் - கி.பி.1942

* கி.பி.1945-ல் போருக்குப் பின் இங்கிலாந்தில் தொழிற்கட்சி வெற்றிபெற்று ‘கிளமண்ட் ஆட்சி’தலைமையில் ஆட்சி அமைந்தது.

* நேதாஜி என அழைக்கப்படுபவர் - சுபாஷ் சந்திரபோஸ்

* இந்திய விடுதலைக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை சுபாஷிடம் ஒப்படைத்தவர் - இராஷ் பிகாரி போஸ்.

* போஸின் முழக்கம் - டெல்லியை நோக்கிச் செல்.

* காபினெட் அல்லது அமைச்சரவைக் குழு ஏற்பட்ட ஆண்டு - கி.பி.1946.

* இக்குழுவில் இருந்தவர்கள் - பெதிக் லாரன்ஸ், ஏ.வி. அலெக்சாண்டர், சர்.ஸ்டா போர்டு கிரிப்ஸ்

* இடைக்கால அரசாங்கம் கி.பி.1946-ல் நேருவைப் பிரதமராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

* கி.பி.1947-ல் ஆங்கில அரசுப் பிரதிநிதியாகப் பதவியேற்றவர் - மவுண்ட்பேட்டன்.

* கி.பி.1947 ஜுன் 3-ல் மவுண்ட்பேட்டன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அது மவுண்ட்பேட்டன் திட்டம் அல்லது ஜுன் 3-ம் நாள் திட்டம் ஆகும்.

* இத்திட்டத்தின்படி இந்தியா, இந்திய யூனியன் என்றும், பாகிஸ்தான் யூனியன் என்றும் இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.

* மவுண்ட்பேட்டன் திட்டத்தின் அடிப்படையில் இங்கிலாந்து அரசு 1947-ல் ஜுலை மாதம் இந்திய விடுதலைச் சட்டத்தை நிறைவேற்றியது.

* விடுதலை நாள் கி.பி.1947 ஆகஸ்ட்  மாதம் 15 ஆம் நாள் ஆகும்.

* கி.பி.1947 ஆகஸ்ட் 15-ல் ஆங்கிலக் கொடி (யூனியன் - ஜாக்) இறக்கப்பட்டு மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது.

* சுதந்திர இந்தியாவில் முதல் தலைமை ஆளுநர் - மவுண்ட்பேட்டன் பிரபு.

* சுதந்திர இந்தியாவில் முதல் பிரதமர் - ஜவஹர்லால் நேரு.

* சுதந்திர இந்தியாவில் முதல் இந்திய தலைமை ஆளுநர் - சி.இராசகேபாலாச்சாரியார்.

* இந்திய அரசுகளை ஒன்றிணைத்தது - சர்தார் வல்லபபாய் பட்டேலின் சாதனை.

* சுதந்திர இந்தியாவில் 565 சுதேசி அரசுகள் இருந்தன.

* சுதந்திர இந்தியாவில் 562 சுதேசி அரசுகள் இந்திய யூனியனுடன் இணைந்தன.

* சுதந்திர இந்தியாவில் 3 சுதேசி அரசுகள் இணையாதவை. அவை காஷ்மீர், ஐதராபாத், ஜுனாகத். பிறகு இவை இந்தியாவுடன் இணைந்தன.

* பிரெஞ்ச் அரசின் அனுமதியுடன் பாண்டிச் சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் மற்றும் சந்திரநாகூர் ஆகிய பகுதிகள் கி.பி.1954-ல் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டன.

* போர்ச்சுக்கீசிய பகுதிகள் - கோவா, டையூ, டாமன்.

* இப்பகுதிகள் இந்தியாவுடன் இணைந்த ஆண்டு - கி.பி.1961.

* இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்

* இந்தியா குடியரசானது - கி.பி.1950 ஜனவரி 26 ஆம் தேதி.

இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு

* தேசப்பற்று, தைரியம், சுயமரியாதை மற்றும் தியாகத்திற்குப் பெயர் பெற்றவர்கள் பூலித்தேவர், கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலுத்தம்பி ஆகியோர்.

* சென்னை மாகாணத்தில் மக்கள் உரிமைகளை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட முதல் அமைப்பு ‘சென்னை சுதேசி சங்கம்’ இதை நிறுவியவர்கள் ஹார்வி லட்சுமி நாகச்செட்டி மற்றும் சீனிவாசப்பிள்ளை. நிறுவப்பட்ட ஆண்டு 1852.1884 ஆம் ஆண்டு சென்னை சுதேசி சங்கம், சென்னை மகாஜன சபையுடன் இணைக்கப்பட்டது.1896 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ‘காந்தி’சென்னை மகாஜன சபையில் உரையாற்றினார்.

* செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்பட்ட வ.உ. சிதம்பரம்பிள்ளை செப்டம்பர் 5 ஆம் தேதி, 1872 ஆம் ஆண்டு ஓட்டப்பிடாரத்தில் பிறந்தார்.

* சுதேசி தர்மசங்க நெசவாளிகள் சங்கம், சுதேசி கூட்டுறவு அங்காடிகளை தூத்துக்குடியில் தோற்றுவித்தார்.
 1907ஆம் ஆண்டு நடைபெற்ற சூரத் காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார்.

* பாரதியார் திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் டிசம்பர் 11-ம் தேதி 1882இல் பிறந்தார்.

* சுதேசமித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும், ‘இந்தியா’இதழின் ஆசிரி யராகவும் பணியாற்றினார். பாரதியின் படைப்புகளுக்கு ஆங்கிலேய அரசு 1909 ஆம் ஆண்டு தடை விதித்தது.

* ராஜாஜி ‘தொரப்பள்ளி’என்ற இடத்தில் டிசம்பர்-10, 1878இல் பிறந்தார். 1930 ஆம் ஆண்டு வேதாரண்யம் சத்யாகிரகத்தை தலைமையேற்று நடத்தினார்.1930 இல் ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) தனக்குப்பின் சத்தியமூர்த்தியை அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாட்டுப் பிரிவின் தலைவர் ஆக்கினார்.

1939 இல் சென்னை மேயரான சத்தியமூர்த்தி, பூண்டி நீர்த்தேக்கம் கட்டினார் (சத்தியமூர்த்தி சாகர்)இனி அடுத்த இதழில் புவியியல் பாடத்திலிருந்து வரக்கூடிய வினாக்களுக்கான பகுதிகளைப் பார்ப்போம்…

X