இளம் ஆராய்ச்சியாளர் விருது-2017 விண்ணப்பித்துவிட்டீர்களா?

1/6/2017 2:40:51 PM

இளம் ஆராய்ச்சியாளர் விருது-2017 விண்ணப்பித்துவிட்டீர்களா?

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

அறிவிப்பு

தோராப்ஜி டாடாவின் மனைவி லேடி மேஹெர்பாய் டாடா, லுகேமியா என்ற ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1931ம் ஆண்டு இறந்தார். தன் மனைவியின் இழப்பைத் தாங்க முடியாத தோராப்ஜி டாடா 1932ல் லேடி டாடா மெமொரியல் டிரஸ்டை ஆரம்பித்தார்.

இுதன் மூலம் உயிரி தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த அறிவியல் துறைகளில் புதுப் புது ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களுக்குச் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் ஒவ்வொரு ஆண்டும் விருதுகளையும், ஊக்கத்தொகையும் வழங்கி ஊக்குவி்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக 2017ம் ஆண்டுக்கான இளம் ஆராய்ச்சியாளர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் மெடிக்கல் சயின்ஸில் முதுநிலைப் பட்டம் படித்தவராகவோ அல்லது  பயலாஜிக்கல்  சயின்ஸில் பிஹெச்.டி பெற்றவராகவோ அல்லது இதற்குச் சமமான தகுதியை உயிரி தொழில்நுட்பத்தில் பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். மேலும் தன் துறையில் கண்டிப்பாக 4 வருட அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகம் அல்லது ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் நிலையான பணிபுரிபவராக இருத்தல் அவசியம். வயதுவரம்பை பொறுத்தவரை 31.3. 2017 தேதிப்படி 40 வயதிற்கு உட்பட்டோராக இருத்தல் வேண்டும்.விருது மற்றும் ஊக்கத்தொகை: தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின்  வழியாக 25,000 ரூபாய் மாதச்சம்பளத்தில் சேர்த்து  மாதா மாதம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

மேலும் உயிரி தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த அறிவியல் கருத்தரங்குகள் மற்றும் அது தொடர்பான ஆராய்ச்சிகளில் தேசிய அல்லது உலகளவில் பயணம் செய்து கலந்துகொள்ள ரூ. 5 லட்சம் வரை இவ்விருதின் கீழ் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மூன்று வருடம்   இவ்விருதின் பயன்களைப் பெறுவர், தனது ஆராய்ச்சியைப் பொறுத்து மேலும் இரண்டு வருடம் இவ்விருதை நீட்டிப்பது குறித்து இந்த டிரஸ்ட் கமிட்டி தீர்மானிக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புவோர் அவர்கள் வேலை செய்யும் கல்வி நிறுவனம் அல்லது ஆய்வகத்தின் பரிந்துரையோடு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 500ஐ  லேடி டாடா மெமொரியல் டிரஸ்ட்டுக்கு மணி ஆர்டர் மூலமாக அனுப்ப வேண்டும். மேலும் மணி ஆர்டரை பிரதி எடுத்து ஆன்லைன் விண்ணப்பத்தை பிரின்ட் எடுத்து சேர்த்து அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை ‘The Secretary, Ldy Tata Memorial Trust, Bombay House, 24 Homi Mody Street, Mumbai 400001’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.1.2017
மேலும் விவரங்களுக்கு https://www.ladytatatrust.org/StaticPageIndia/Awards என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- வெங்கட் குருசாமி

மேலும்

X