அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

1/6/2017 2:48:56 PM

அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

மொழி

Data  வா?...Datas ஆ?

ரகு அலுவலகப் பணியில் மிகவும் ஆழ்ந்துபோயிருந்தார். அப்போது “இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சார்” என்றபடியே ரகுவின் எதிரில் வந்து நின்றாள் ப்ரவீணா. “Thanks and Same to you Praveena” என்றார் ரகு.

“எனக்கு ஒரு டவுட் இருக்கு. க்ளியர் பண்ணுவீங்களா சார்?” என்று கேட்ட ப்ரவீணாவிடம் “Don’t be silly! You’re already a brilliant girl! What’s the doubt? Come on… Shoot” என்றார் ரகு. ரவி அனுப்பியிருந்த ஒரு குறுஞ்செய்தியைக் காட்டினாள். “Please send all the data’s before noon” என்ற அந்த குறுஞ்செய்தியைப் படித்த ரகு உடனடியாக ரவியை இண்டர்காம் மூலம் அழைத்தார்.

ரகுவின் இருக்கைக்கு வந்த ரவி அங்கிருந்த ப்ரவீணாவை பார்த்தவுடன் புரிந்து கொண்டான். “சொல்லுங்க சார். நான் அனுப்பிய smsல் ஏதோ தப்பிருக்குங்களா சார்?” என்றபடியே ஒரு சேரை இழுத்து அமர்ந்தான் ரவி. “ஆமா ரவி.

முதல்ல எங்கெங்கெல்லாம் ‘S’ என்ற எழுத்து வார்த்தையின் இறுதியில் வருதோ அதற்கு முன்னே apostrophe போடறது ரொம்ப ரொம்ப ரொம்ப தப்பு. அப்புறம், முதல்ல ஒருமை பன்மையைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சிக்கிறது நல்லது. அதாவது, boy என்றால் பையன், boys என்றால் பையன்கள்.

girl என்றால் பொண்ணு.. girls என்றால் பொண்ணுங்க… அல்லவா? ஆனா man என்றால் மனிதன்…..men என்றால் மனிதர்கள். அதே மாதிரிதான் ox என்றால் எருது oxen என்றால் எருதுகள். புரியுதா? datum என்பது ஒருமை (Singular) தகவல், செய்தித்துகள் அல்லது செய்திக் குறிப்பு என்று பொருள்.

data என்பது பன்மை (Plural) தகவல்கள், செய்தித்துகள்கள் அல்லது செய்திக் குறிப்புகள் என்ற பன்மைப் பொருள் தரும் வார்த்தை. ஏற்கனவே அது பன்மையில்தான் உள்ளது. அதுகூட S சேர்த்து மேலும் பன்மையாக்க முடியாது.  data என்பதே பன்மைதான்.” என்றார் ரகு.

இதை கேட்ட ரவி,“Oh my god! இவ்ளோ விஷயம் இருக்கா இதில. இதே மாதிரி வேற ஏதாச்சும் வார்த்தைகள் இருக்குங்களா சார்?” என்றான்.ரவியைப் பார்த்த ரகு, “நிச்சயமா ரவி! bacterium  bacteria, curriculum  curricula, fungus  fungi (ஃபங்கை), medium  media, syllabus  syllabi (சிலபை) (syllabuses என்றும் உண்டு)” என்றார்.

ரகுவின் விளக்கங்களைக் கேட்டுக்கொண்டிருந்த ப்ரவீணா “datum, data-வைப்பற்றி இவ்வளவு டேட்டா கொடுத்ததற்கு மிக்க நன்றி சார்!” என்று சொல்லிவிட்டு தனது இருக்கைக்குச் சென்றாள்.

சேலம் ப.சுந்தர்ராஜ்

மேலும்

X