கோயில்களில் ஓதுவார் பணிக்கான ஓதுவார் பயிற்சிப்பள்ளி சான்றிதழ் படிப்பு படிக்கத் தயாரா?

7/13/2017 2:28:09 PM

கோயில்களில் ஓதுவார் பணிக்கான ஓதுவார் பயிற்சிப்பள்ளி சான்றிதழ் படிப்பு படிக்கத் தயாரா?

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழான மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டுவருகிறது ஓதுவார் பயிற்சிப் பள்ளி. இப்பள்ளியில் நடைபெறும் ஓதுவார் பயிற்சிக்கான சான்றிதழ் படிப்பில் 2017 - 2018 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற விண்ணப்பிக்கலாம்.

சேர்க்கைத் தகுதிகள்
8 ஆம் வகுப்பு தேர்ச்சியோடு, 13 -20 வயதுக்குள் இருப்பது அவசியம். மேலும், நல்ல குரல்வளமும், உடல் திறனும் பெற்றிருப்பதுடன் சமயத்தீட்சை பெற்றிருப்பது தேவை.

விண்ணப்பம்
விண்ணப்பக் கடிதம் ஒன்றினை எழுதி அதில் விண்ணப்பதாரர் பெற்றோர் கையொப்பத்தினையும் சேர்த்துப் பெற்று, பயோடேட்டா, புகைப்படம், வயது மற்றுக்கல்வித் தகுதிகளுக்கான சான்றிதழ் நகல்களையும் இணைத்து “இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை - 625001” எனும் முகவரிக்கு அனுப்பித்தர வேண்டும்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 20-7-2017.

உதவித்தொகை
தகுதியுடைய  மாணவர்கள் தேர்வு செய்யப்பெற்றுப் பயிற்சிக்குச் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். தேர்வாகும் மாணவர்களுக்கு உணவு, சீருடை, தங்குமிடம் போன்ற வசதிகளுடன் மாதம் ரூ.1000/- பயிற்சிக்கால உதவித்தொகையும் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் படிப்பு தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறையின் கோயில்களில் ஓதுவார் பணிக்குத் தகுதியுடையதாகும்.

விவரங்கள் அறிய http://www.maduraimeenakshi.org/ எனும் இணையதளத்திற்குச் சென்று அறிந்துகொள்ளலாம். மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் அலுவலத்தின் 0452 - 2344360 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

- தேனி மு. சுப்பிரமணி

மேலும்

X