நாசா செல்லும் இந்திய மாணவர்கள்!

10/9/2017 12:07:28 PM

நாசா செல்லும் இந்திய மாணவர்கள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இன்டர்நேஷனல் மேத்தமேட்டிக்ஸ் அண்ட் சயின்ஸ் ஒலிம்பியாட் எனும் தலைப்பில்  ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச அளவில் கணிதம் மற்றும் அறிவியல் துறைசார்ந்து நடத்தப்படும் போட்டியானது பிரைமரி குழந்தை களுக்காகவே பிரத்யேகமாக வடிமைக்கப்பட்டது.

அனைத்துத் துறைகளிலும் இன்றியமையாததாக விளங்கும் கணிதம் மற்றும் அறிவியல் துறைகளில் ஆர்வம் இருக்கும் சர்வதேச மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவிப்பதற்காக 2011ம் ஆண்டு சிங்கப்பூரின் கல்வி அமைச்சகம் உருவாக்கிய உலகப் போட்டியே இது.

வெற்றிபெற்றவர்களை நாசா விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைத்தல், அறிவியல் சார்ந்த கண்டு பிடிப்புகளில் ஈடுபடச்செய்தல், டெக்னாலஜி குறித்த கருத்தரங்குகளில் பங்குபெறச் செய்தல் என மாணவர்களின் திறமையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் தூண்டுகோலாகச் செயல்படுகிறது இப்போட்டி.

மொத்தம் நான்கு ரவுண்டுகள் கொண்ட இப்போட்டி யில், இந்த வருடம் சுமார் 25 லட்சம் மாணவர்கள்  கலந்துகொண்டனர். இப்போட்டியின் மூன்றாம் மற்றும் நான்காம் ரவுண்டு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. கலந்துகொண்ட 25 லட்சம் மாணவர்களில் 28 மாணவர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு, அதில்  மொத்தம் எட்டு இந்திய மாணவர்கள் நாசா செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

முதல் இரண்டு இடங்களை வென்றதற்காகத் தங்கப் பதக்கம் பெற்று நாசா செல்வதற்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர் ஒடிசாவிலுள்ள DAV பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் யாஷ்மிஷ்ரா மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்வேதாஸ்னிக்தா. இதில் ஏழாம் வகுப்பு படிக்கும் யாஷ்மிஷ்ரா இப்போட்டியை முதல் தரத்தில் இரண்டு முறை வென்று ஒரே வருடத்தில் இரண்டாவது முறையாக  நாசா செல்வதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- குரு

X