அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

11/21/2017 2:32:03 PM

அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

மொழி

Once bitten twice shy

ஓய்வு நேரத்தில் இன்டர்நெட்டை அலசி ஆராய்ந்துகொண்டிருந்த ப்ரவீணா ஒரு சேலை விளம்பரத்தைப் பார்த்தவுடன் அருகிலிருந்த அகிலாவைக் கூப்பிட்டு,“அகி... இந்த விளம்பரத்திலுள்ள சேலைகளைப் பாரேன். கலர், டிசைன் எல்லாமே சூப்பராயிருக்கு. விலையும் கம்மி. ஆர்டர் பண்ணலாமா?” எனக் கேட்டாள்.

“எனக்கு வேணாம்பா இந்த ஆன்லைன் ஆர்டர் விவகாரமே. ஏற்கனவே ஒருமுறை ஆர்டர் பண்ணி ஏமாந்திருக்கேன். ஸ்கிரீன்ல பார்க்கறதுக்கும் நேர்ல பார்க்கறதுக்கும் நேர்மாறா இருக்கு. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. இனிமே இலவசம்னாலும் சரி, நான் இணையம் மூலம் ஏதும் வாங்குவதாயில்லை” என்றாள் அகிலா.இதைக் கவனித்த ரகு, “அகிலா… போன முறை நீ கேட்டியே ‘வொன்ஸ் பிட்ன் ட்வைஸ் ஷை’ என்றால் என்னவென்று.

இப்ப பாரு! நீயே உதாரணத்தோட விளக்கமாச் சொல்லிட்ட. அதாவது, ‘once bitten twice shy’ is said when you are frightened to do something again because you had an unpleasant experience doing it the first time. You will not do it a second time because you had a very bad experience the first time you did it. ‘சூடுபட்ட பூனை அடுப்பண்ட சேராது’ என்பார்கள். அந்த மாதிரி முதல் முயற்சியில் ஏற்பட்ட பயம் அல்லது காயம்… இரண்டாவது முயற்சியெடுக்கலாம் என எண்ணும்போதே மனம் ஒத்துழைக்காமல் ஓடியே போய்விடும்.” என்றார்.

உடனே, “சார்… ‘ஷை(shy)’ என்றால் ‘வெட்கம்’ என்றுதானே அர்த்தம். ஆனா இங்க எப்படி..?” என்று சந்தேகத்தை எழுப்பிய அகிலாவை இடைமறித்த ரகு, “இல்லம்மா… ‘ஷை(shy)’-க்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. Shy என்றால் கூச்ச சுபாவம் (Don’t be shy Come and say hello) வேகமாய் எறிதல் (He gave the ball a shy to the first baseman), பயத்தினால் ஓடுதல் (The horse shied at the unfamiliar noise) குறைவு அல்லது பற்றாக்குறை, (Eleven is one shy of a dozen) இப்படி பலவிதங்களில் பொருள் தரும்.

இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நாளை சந்திக்கும்போது on cloud nine என்பதைப் பற்றி விவாதிக்கலாம்” என்று சொல்லிவிட்டு இருக்கையில் சென்று அமர்ந்தார் ரகு. ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com

சேலம் ப.சுந்தர்ராஜ்

X