TNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்

1/10/2018 12:40:52 PM

TNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து பல லட்சம் பேர் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் சூழலில் அந்தப் போட்டியாளர்களுக்கும் இந்தப் பகுதி பயனுள்ளதாக இருக்கும். கடந்த இதழ்களில் பொதுஅறிவு பகுதியில் அறிவியல் சார்ந்த வினாக்களை எதிர்கொள்வதற்கான தகவல்கள் வழங்கப்பட்டுவருகின்றன. அதன் தொடர்ச்சியை இனி பார்ப்போம்…  

பரப்பு இழுவிசை
* பாதரசத்தின் அடர்த்தி இரும்பின் அடர்த்தியை விட அதிகம். எனவே, இரும்பு பாதரசத்தில் மிதக்கிறது.
* ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் உயரே செல்கிறது. காரணம், ஹைட்ரஜன் வாயுவின் அடர்த்தி காற்றின் அடர்த்தியை விட குறைவு. எனவே மேலே செல்கிறது.
* பனிக்கட்டி நீரைவிடக் குறைந்த அடர்த்தியுடையது. பனிக்கட்டி அதன் கன அளவில் பத்தில் ஒரு பங்கு நீரின் மேல் காணப்படுகிறது.
* நீர் நிரம்பிய குடுவையில் பனிக்கட்டி மிதக்கிறது. பனிக்கட்டி உருகும்போது நீர்மட்டம் ஒரே அளவாக இருக்கும்.
* திடப்பொருள் திரவநிலைக்கு மாறும் நிகழ்ச்சி உருகுதல்.
* திரவப்பொருள் திடநிலைக்கு மாறும் நிகழ்ச்சி உறைதல்.
* பனிக்கட்டித் துண்டு, உப்பு, அம்மோனியம் நைட்ரேட் இம்மூன்றும் சேர்ந்தது. உறை கலவை.
* பிரஷர் குக்கரின் கொதிநிலை 1200 C.
* நீர் பனிக்கட்டியாக உறையும்போது வெப்பம் வெளியிடப்படும்.

ஒலி பரவுதல்
* காற்றில் ஒலி அலைகள் நெட்டலைகளாகப் பரவுகின்றன.
* ஒலி அலைகள் பரவுவதற்கு ஊடகம் தேவை.
* ஒலியானது வெற்றிடத்தின் வழியாகப் பரவாது.
* சந்திரனில் இரு மனிதர்கள் பேசும்போது அவர்களுடைய பேச்சு இருவருக்கும் கேட்பதில்லை.
* ஒலியானது திட, திரவ, வாயுக்களில் பரவுகிறது.
* ஒலியானது திட, திரவ, திடப்பொருளில் அதிகமாக இருக்கும்.
* ஒலியின் திசைவேகம் - திடப்பொருள்  > திரவப்பொருள்  > வாயு.
* காற்றில் ஒலியின் திசைவேகம் = 331 மீ /வி. (10 உயர்வுக்கு 81 மீ / வி ஒலியின் வேகம் உயர்கிறது )
* நீரில் 200 C யில் ஒலியின் திசைவேகம் = 1482 மீ / வி.
* இரும்பில் ஒலியின் திசைவேகம் = 5000 மீ / வி.
* கிரானைட்டில் ஒலியின் திசைவேகம் = 5000 மீ / வி.
* ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும் காரணிகள்
* ஒலி, ஈரப்பதம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றைவிட வேகமாகப் பரவும்.
* ஒலியின் திசைவேகம் ஊடகத்தின் அடர்த்திக்கு எதிர் விகிதத்தில் இருக்கும்.
* ஒலியின் திசைவேகம் வெப்பநிலையின் இருமடி மூலத்திற்கு நேர்தகவில் இருக்கும்.
* ஒலியின் திசைவேகம் அழுத்தத்தைச் சார்ந்து மாறுவதில்லை.

அதிர்வு வகைகள்
1. இயல்பு அதிர்வுகள்                                                                       
2. திணிப்பு அதிர்வுகள்
3. ஒத்த அதிர்வுகள்
* இழுத்துக்  கட்டப்பட்ட கம்பியின் அதிர்வுகள், அதிர்வூட்டப்பட்ட இசைக் கருவியின் அதிர்வுகள், அலைவுறும் தனி ஊசல் ஆகியவை இயல்பு அதிர்வுகள் ஆகும்.
* வீணை, வயலின் போன்ற இசைக்கருவிகளில் ஏற்படும் அதிர்வுகள், திணிப்பு அதிர்வுகள் எனப்படும்.
* அதிர்வுறும் பொருளின் அதிர்வெண்ணும் பொருளின் மேல் செயல்படும் சீரான புறவிசையின் அதிர்வெண்ணும் சமமாக இருப்பின், பெரும் வீச்சுடன் அதிர்வுகள் ஏற்படும். இதுவே ஒத்த அதிர்வு எனப்படும். இதனால் தொங்கு பாலத்தின் மீது படைவீரர்கள் ஒரே சீராக அணிவகுத்துச் செல்ல அனுமதிக்கப் படுவதில்லை.

எதிரொலி
* சிறிய அறையில் நேரடி அலைகளும் எதிரொலிப்பு அலைகளும் ஒரே சமயத்தில் நமது செவியை அடையும்.
* அறை பெரிதாக இருப்பின் அலைகள் செல்ல வேண்டிய தூரம் அதிகமாகின்றது. அந்த அலைகள் நம்மை அடைய 1 x 10 நொடிகளுக்கு   மேல் எடுத்துக் கொண்டால் அந்த ஒலியலைகளை நாம் தனியாகக் கேட்கின்றோம். இதனையே எதிரொலி என்கிறோம்.
* எதிரொலிக்கும் தளத்தின் தொலைவு 17 மீட்டருக்கு மேல் இருந்தால் நேரடி ஒலியும் எதிரொலிக்கப்பட்ட ஒலியும் தனித்தனியாகக் கேட்கும்.

காற்றுக்கருவிகள்
காற்றுத்தம்பம் அதிர்வடைந்து ஒலியை உண்டாக்கும் கருவிகள் காற்றுக் கருவிகள் எனப்படும்.
1. குழாய்கள் உள்ள ஊதுகுழல் கருவி - நாதஸ்வரம்
2. குழாய்கள் அற்ற ஊதுகுழல் கருவி - ஹார்மோனியம்
3. ஊதுகுழல் அற்ற குழாய்க் கருவிகள் - புல்லாங்குழல், தாரை
4. ஒலியின் அலகு டெசிபல் ஆகும்.

நிலையான அலைகள்
* கணுக்களும், எதிர்கணுக்களும் நிலையாக அடுத்தடுத்து ஏற்படுகின்றன.
* இரு அடுத்தடுத்த கணுக்கள் அல்லது எதிர்க்கணுவிற்கும் இடையேயுள்ள தொலைவு λ/2 ஆகும். ஒரு கணுவிற்கும் அடுத்த எதிர்க்கணுவிற்கும் இடையேயுள்ள தொலைவு λ/4 ஆகும்.
* கிதார், வயலின், வீணை போன்ற இசைக் கருவிகளில் நிலையான குறுக்கலைகள் தோன்றுகின்றன.
* புல்லாங்குழல், நாதஸ்வரம், கிளாரினெட் போன்ற காற்று இசைக் கருவிகளில் நிலையான நெட்டலைகள் தோன்றுகின்றன.
* இருமுனை திறந்த ஆர்கன் குழாயில் ஏற்படும் சுரங்கள் இயல் எண் வரிசையில் அமையும்.
* ஒரு முனை மூடிய ஆர்கன் குழாயில் ஏற்படும் சுரம், ஒற்றை சீரிசைத் தொடர்கள் ஆகும். மேலும் பொதுஅறிவு சார்ந்த அறிவியல் பாடப் பகுதியில் மீயொலிகள், மீயொலிகளின் பயன்கள் உள்ளிட்ட பல தகவல்களை அடுத்த இதழில் பார்ப்போம்.

முனைவர் ஆதலையூர் சூரியகுமார்

X