அடடே ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

1/10/2018 12:46:50 PM

அடடே ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

அலுவலகப் பணியில் ஆழ்ந்திருந்த ரகுவை நோக்கி வந்த ரவி, “ஒருவாக்கியத்தில் சப்ஜக்ட்டை (Subject) எப்படிங்க சார் கண்டுபிடிக்கறது?” என்று கேட்டான். உடனே ரகு, “Good question Ravi. Look at these sentences. 1) Pupils wrote. 2) Girl Pupils wrote. 3) Girl Pupils of V std wrote. 4) Girl Pupils of V std of this School wrote. 5) Girl Pupils of V std of all schools in Chennai wrote. போல்ட் (bold) லெட்டர்ஸ்ல இருக்கறது எல்லாம் subject தான். That is, ‘Doer of the Action’. The subject can be of a single word or even a phrase.

உதாரணத்திற்கு, Pupils wrote (மாணவர்கள் எழுதினர்) இதில் “எழுதியது (the action) யார்?” எனக் கேட்டால் என்ன பதில் வருகிறதோ அதுதான் SUBJECT” என்றார். “அதாவது வினைச்சொல்லுக்குமுன் ‘யார்’ அல்லது ‘எது?’ என்ற கேள்வியைப் போட்டால் அதற்கு என்ன பதில் வருகிறதோ அதுதான் ‘சப்ஜக்ட்’ இல்லைங்களா சார்?” என்றான் ரவி. ரவியை நிமிர்ந்து பார்த்த ரகு “இக்ஸாக்ட்லி ரவி. அதற்கு மாறாவினைச் சொல்லுக்குப் பின் ‘யாரை’ அல்லது ‘எதை?’ என்ற கேள்வியைப் போட்டால் அதற்கு என்ன பதில் வருகிறதோ அதுதான் ‘ஆப்ஜக்ட்’. உதாரணத்திற்கு, The pupils wrote an essay.

இதில் who wrote? என்பதன் பதில் ‘the pupils’. எனவே, அது சப்ஜக்ட். …wrote what? எனக் கேட்டால், அதன் பதில் ‘an essay’. எனவே, இது ஆப்ஜக்ட். My sister called Suresh. இதில் Who called? எனக் கேட்டால் My sister என்பது பதில். எனவே, அது சப்ஜக்ட். மாறாக My sister called who? எனக் கேட்டால்  Suresh என்பது பதில். எனவே, இது ஆப்ஜக்ட். அல்டிமேட்லி இதுல நாம ஞாபகம் வச்சிக்க வேண்டியது என்னென்னா… வினைச் சொல்லுக்கு முன் 99% சப்ஜக்ட் வரும் வாய்ப்பு உண்டு” என்றார். “அப்படின்னா வினைச்சொல்லுக்குப் பின் வர்றது ஆப்ஜக்ட்ங்களா சார்?” அகிலா இடையே புகுந்தாள். “அப்படி எல்லாம் சொல்ல முடியாது அகிலா. A verb may be followed by an object (either direct, indirect or both), an adjunct, or a complement.  

உதாரணத்திற்கு, She went to temple. இதில் (she என்பது Subject.) (went என்பது Verb.) (To temple என்பது Adjunct.) went என்ற verbக்கு அடுத்து வருவதால் to temple என்பதை object என்று சொல்ல முடியாது. நான் சொன்ன கேள்விச் சொற்களும் அவற்றுக்கான பதில்களும்தான் சப்ஜக்ட் மற்றும் ஆப்ஜக்ட்டை நிர்ணயம் செய்பவை. Okey.Time up. Let us discuss (She selected the leader. She was selected, the leader.) in the next meeting. See you!” என்றவாறே எழுந்து வெளியே சென்றார் ரகு. ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com

- சேலம் ப.சுந்தர்ராஜ்

X