கோவை வேளாண் பல்கலை.யில் ஜூலை 6-ல் உலகத் தமிழ் இணைய மாநாடு தொடக்கம்

4/11/2018 2:46:01 PM

கோவை வேளாண் பல்கலை.யில் ஜூலை 6-ல் உலகத் தமிழ் இணைய மாநாடு தொடக்கம்

உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) உலகின் பல இடங்களில் அரசுகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தமிழ் இணைய மாநாட்டை தொடர்ந்து நடத்தி வருகிறது. 17-வது உலகத் தமிழ் இணைய மாநாடு கோவை வேளாண் பல்கலை.யில் வரும் ஜூலை 6, 7, 8 தேதிகளில் நடக்கிறது.

உலகத் தமிழர்களிடையே கணினி வழி தமிழ்க் கல்வியையும், தமிழ்ப் பண்பாட்டையும் பரப்புவதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 300-க்கும் அதிகமான கணினி வல்லுநர்கள் மாநாட்டில் கட்டுரை படிக்க உள்ளனர். கட்டுரைகள் சமர்ப்பிப்பது தொடர்பான விவரங்களை http:/tamilinternetconfrence.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

X