நாடகக்கலை பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்க ரெடியா?

4/13/2018 11:57:25 AM

நாடகக்கலை பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்க ரெடியா?

இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் (Ministry of Culture) கீழ் புதுதில்லியில் அமைக்கப்பட்டிருக்கும் தேசிய நாடகப் பள்ளி (National School of Drama) மூன்றாண்டு கால நாடகக் கலைகளுக்கான பட்டயப்படிப்பு (Three Years Diploma Course in Dramatic Arts) அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

வயது மற்றும் கல்வித் தகுதிகள்  
ஆங்கிலம் மற்றும் இந்தி இரு மொழிகளில் பயிற்றுவிக்கப்படும், பட்டயப் படிப்பிற்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஆறு நாடகம் தொடர்புடைய அரங்கத் தயாரிப்புகளில் பணியாற்றியிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்திமொழிகளில் பணியாற்றத் தகுதியுடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் 1-7-2018 அன்று 18 வயதுக்குக் குறையாமலும், 30 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டு வயதுத் தளர்வு உண்டு. தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பள்ளி நிர்ணயித்திருக்கும் மருத்துவத் தகுதியையும் பெற்றிருக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு
மொத்தம் 26 இடங்கள். எஸ்.சி (4), எஸ்.டி (2), ஓ.பி.சி (7) என இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு இந்திய அரசு இட ஒதுக்கீட்டு விதியின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும்.

மாணவர் தேர்வு
முதனிலைத் தேர்வு (Preliminary Test), கேட்டாய்தல் (Audition) மற்றும் இறுதிப் பட்டறை (Final Workshop) தேர்வுகளும் நடைபெறும். பிறகு செயல்திறன் (Aptitude) மற்றும் திறனை (Talent) மதிப்பீட்டு மாணவர்களின் சேர்க்கையை இறுதி செய்யப்படும்.
முதனிலைக் கேட்டாய்தல் தேர்வுகள் ஜெய்ப்பூர் (மே 1,2, 2018), சண்டிகர் (மே 4,5, 2018), லக்னோ (மே 7,8, 2018), பாட்னா (மே 11,12, 2018), புபனேஸ்வர் (மே 14, 2018), கொல்கத்தா (மே 16,17,18, 2018), கவுகாத்தி (மே 20, 2018), சென்னை (மே 22, 2018), பெங்களூரு (மே 24, 2018), மும்பை (மே 26,27,28,29 2018),  போபால் (மே 31, 2018, மற்றும் ஜுன் 1, 2018), டெல்லி (ஜுன் 4,5,6,7,8, 2018) தேதிகளில், 12 மையங்களில் நடைபெறும்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்குப் புதுடெல்லியில் தேசிய நாடகப்பள்ளி வளாகத்தில் 26-6-2018 முதல் 30-6-2018 வரை ஐந்து நாட்கள் பட்டறை வகுப்புகள் நடைபெறும். இதற்கான இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும். மாணவர் சேர்க்கை இறுதி செய்யப்பட்டு தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.

விண்ணப்பம்
விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் குறிப்பேட்டினை “The Dean, Academic, National School of Drama, Bahawalpur House, Bhagwandas Road, New Delhi - 110001” முகவரிக்கு வேண்டுதல் கடிதத்துடன் “The Director, National School of Drama, New Delhi” எனும் பெயரில் புதுடெல்லியில் மாற்றிக்கொள்ளக்கூடியதாக எடுக்கப்பட்ட ரூ.225/- க்கான வங்கி வரைவோலை (Demand Draft) இணைத்து 16-4-2018 ஆம் தேதிக்குள் அனுப்பி அஞ்சல் வழியாகப் பெற்றுக்கொள்ளலாம். தேசிய நாடகப்பள்ளியின் புத்தக விற்பனை மையத்தில் ரூ.150/- ஐ நேரடியாகச் செலுத்தியும் பெற்றுக்கொள்ளலாம். www.nsd.gov.in இணைய தளத்தில் விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்து, நிரப்பி, ரூ.150/-க்கான வங்கி வரைவோலையினை இணைத்து அனுப்பவேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16-4-2018.

கூடுதல் விவரங்களுக்கு
www.nsd.gov.in இணையதளத்தைப் பார்வையிடலாம். 011-23389402 தொலைபேசி எண்ணையோ அல்லது nationalschoolofdrama@gmail.com மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொள்ளலாம்.

தேனி மு. சுப்பிரமணி

X