அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

4/27/2018 2:46:25 PM

அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

மொழி

Wee Hours and Small Hours  

அலுவலகப் பணியில் ஆழ்ந்திருந்த ரகுவை நோக்கி வந்த அகிலா,‘‘ரகு சார், ‘I was studying for the exam until the small hours of the morning and now I can barely open my eyes!’ என்று ஒரு இடத்தில் பார்த்தேன். ‘ஸ்மாலார்ஸ்’ (small hours) என்றால் என்னங்க சார்?” என்று கேட்டாள். அவளது கண்களைப் பார்த்த ரகு, “கண்ணெல்லாம் இவ்ளோ சிவந்து இருக்கே. ஏன்? நேத்து நைட் சரியா தூங்கலயா?” என்று கேட்டார்.

“ஆமாங்க சார். ஊர்ல இருந்து எங்க சொந்தக்காரங்க வந்திருந்தாங்க. அவங்கள பார்த்து பேசி ரொம்ப நாளாச்சு. அதனால பேசுனோம். பேசுனோம். பேசிக்கிட்டே இருந்தோம் சார். மணி முணு, மூணரை ஆயிடுச்சு கண் மூட” என்றவாறே தன் கொட்டாவியை மறைக்கும் வண்ணம் தன் வாயை கைகளால் மூடினாள்.

“That’s it. So.. you had been chatting with your relatives and had been to bed only in the small hours” என்ற ரகு, “நள்ளிரவைத் தாண்டி, ஏறக்குறைய நான்கு , நான்கரை மணி வரை இருக்கும் அர்த்த ஜாமத்தைத்தான் “ஸ்மாலார்ஸ் ” (small hours) எனச் சொல்வார்கள்” என்று தன் தலையைக் கோதியவாறே சொன்னார். “அப்படின்னா ..The police arrested the thief in the wee hours of Saturday morning… இந்த வாக்கியத்தில் வருகிற வ்வீ ஆர்ஸ்-க்கு என்னங்க சார் அர்த்தம்?” என்று கேட்டான் ரவி.

“அதேதான் ரவி. Small hours and wee hours are one and the same. அதிகாலை நான்கு மணிக்கு மேல் சூரிய உதயமாகும் வரை நேரத்தை (வைகறை) டான் (dawn) எனலாம். பின் சுமார் 6 மணி முதல் 7 மணிவரை இளங்காலை, ஏர்லி மார்னிங் (Early Morning) எனலாம். அதன் பின் சுமார் 9 மணி வரை காலைப்பொழுது, மார்னிங் (Morning) எனலாம். பின் 12 மணி வரை முற்பகல் (ஃபோர்நுான்  fore noon) எனலாம். பகல் 12 மணிப் பொழுதை Twelve Noon எனலாம்.

பின் சுமார் 4 மணிவரை பிற்பகல்  Afternoon பிறகு சுமார் ஆறு மணி வரை மாலை (evening) எனலாம். பின், சூரியன் அஸ்தமிக்கும் அந்தி மாலை நேரத்தை dusk எனலாம். பின் late evening, night, late night, mid night எனப் பலவிதங்களில் சொல்வார்கள். Okey. Time up. Let us buzz off!’’ என்று ரகு சொன்னதும் இடத்தை விட்டு நகர்ந்தாள் அகிலா.

ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com

சேலம் ப.சுந்தர்ராஜ்

X