அடடே...ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

8/30/2018 5:43:50 PM

அடடே...ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி

மொழி

Older vs Elder  

அலுவலகப் பணியில் ஆழ்ந்திருந்த ரகுவின் அருகே வந்த ரவி, ‘‘சார் ஒரு டவுட்.  Degrees of Comparison test paperல  ‘This is the eldest of my children. (old)’ அப்படின்னு குடுத்திருந்தீங்க. Old  older - oldest தானே other degrees of the adjective ‘old’ ஆனா நீங்க eldest-ன்னு சொல்றீங்களே? அது கொஞ்சம் குழப்பமா இருக்குங்க சார் ’’ என்றான். ‘‘எனக்கும் அந்த சந்தேகம் இருக்குங்க சார்” என்றபடியே வந்தமர்ந்தாள் அகிலா.

மேலும் தொடர்ந்த அகிலா, ‘‘அதாவது, old என்ற adjectiveக்கு older- oldest other forms இருக்கு. அதே சமயம்  elder  elder என்ற other forms இருக்கு. அதாவது, old  older  oldest and old  elder  eldest. சரியா..? இரண்டிற்கும் ஒரே பொருள்தான்.  இப்ப குழப்பம் என்னவென்றால் எதை எங்கு உபயோகப்படுத்துவது என்பதுதான்” என்றாள்.

‘‘ரொம்ப இலக்கணத்தனமா யோசிச்சா எல்லையற்ற குழப்பம்தான் மிஞ்சும். அதனால என்னோட அனுபவத்தை வைத்து சொல்கிறேன். அதாவது, நமது குடும்ப உறுப்பினர்களைப் பற்றி பேசும்போது elder and eldest என்ற வார்த்தைகள் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகின்றன. (Elder is used only before noun and of people, especially two members of the same family) He is my elder brother.

She is his elder sister. Chithra is the eldest girl of our family. சித்ராதான் அனைவரிலும் மூத்தவள். Geetha is elder than Seetha. கீதா சீதாவை விட மூத்தவள். எனவே, நமது குடும்ப அங்கத்தினர்களைப் பற்றி குறிப்பிடும்போது ‘மூத்த’ என்று பொருள்படக்கூடிய ‘எல்டர் அல்லது எல்டஸ்ட்’ என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்’’ என்றார் ரகு.

அகிலாவையும் ரவியையும் பார்த்த ரகு, ‘‘நம் குடும்ப உறுப்பினர் அல்லாத பிற மனிதர்களையோ அல்லது பொருட்களையோ குறிப்பிடும்போது older and oldest உபயோகப்படுத்திக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, This building was built in 1909 and this is the oldest building in our city. He is older than my father. His brother is older than Ravi. புரிகிறதா?

மீண்டும் நான் உங்களுக்கு திரும்ப திரும்பச் சொல்றது என்னவென்றால்… தனித்தனியா வார்த்தைகளின் வரலாறுகளை மனப்பாடம் செய்ய முடியாது. படிக்க ஆரம்பிங்க… வார்த்தைகள், அதன் பயன்பாடுகள், அதன் இலக்கணக் குறியீடுகளும் தானாகவே மனதில் பதியும். அதுமட்டுமல்ல. எங்கே எந்த வார்த்தை தேவையோ, அங்கே அது வெளிப்படும்.

Reading helps you to excel in every realm of language. Vocabulary, Fluency, Grammar and its application would be stored up subconsciously in us and would get exposed whenever needed. Okey. Time up. லஞ்சுக்குப் பிறகு பேசலாம்” என்று சொல்லி
விட்டு கேண்டீனுக்கு புறப்பட்டார் ரகு.

ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com

சேலம் ப.சுந்தர்ராஜ்

X