படிக்க வேண்டிய புத்தகம் : கடன் - தாஸ்

10/11/2018 1:08:25 PM

படிக்க வேண்டிய புத்தகம் : கடன் - தாஸ்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

அன்றாட செலவுகள் முதல் அடுக்குமாடி வீடு வரை அனைத்து தேவைகளுக்கும் கைகொடுப்பது கடன் திட்டங்கள்தான். கடன் வாங்குவது தவறாக கருதப்பட்ட காலம் மறைந்து வீட்டில் தொடங்கி நாட்டு நலன் வரை அனைத்துக்கும் கடன் வாங்கும் நிலை இன்று சர்வசாதாரணமாகிவிட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனிநபர்கள் எதற்கும் பயன்படுத்தும் பர்சனல் லோன்களும், நினைத்த நொடியில் செலவழிக்கும் மனோபாவத்தை வளர்க்கிற கிரெடிட் கார்டுகளும் தனியார் வங்கிகளின் மார்க்கெட்டிங் உத்திகளில் ஒன்றாகிவிட்டது. இந்த உத்திகளில் சிக்கி லோனும் கிரெடிட் கார்டும் வாங்கிய பலர், கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தும் சூத்திரத்தை மட்டும் அறியவே முடியவில்லை.

அப்படிப்பட்டவர்களுக்கு ‘கடன்’ என்கிற இந்நூல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இனி கடன் வாங்க வேண்டிய அவசியத் தேவை உள்ளவர்களுக்கும் கூட இந்நூல் ஓர் அர்த்தமுள்ள அகராதி. உங்கள் கவலைகளுக்கு காரணமான கடன்களைத் தீர்க்க வழிகாட்டும் வகையில் இந்நூலை தொகுத்துள்ளார் தாஸ். என்ன தேவைக்கு எந்த கடனை எப்படி பெறுவது, பெற்ற கடனை எப்படி அடைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள தகவல்களை அறிய இந்நூல் நிச்சயம் உதவும். (வெளியீடு:  சூரியன் பதிப்பகம், பிளாட் எண் 170, 10, முதல் பிரதான சாலை, நேரு நகர், பெருங்குடி, சென்னை - 96) விலை: ரூ.80. தொடர்புக்கு: 044-4220 9191).

X